பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருத்தவத்துறை திருப்புகழ் உரை 691 923. வரிசையாயுள்ள முத்து (மாலைகளையும்) நீண்ட ரத்னமாலைகளையும் தாங்கியுள்ளதும், மலைக்கு இணையானதும், மார்பில் விளங்குவதுமான கொங்கை, மேலே ஆபரணங்களைக் கொண்டுள்ளதும், குழற்சியானதும், நெய்ப்பு உள்ளதுமான (குழல்) கூந்தல், வாள்போன்ற கண், அழகிய சந்திரன் போன்ற முகம் இவைகளைக் கொண்டுள்ள மாதர்கள் நெளியும் சிறிய இடையின்மேல் மேகலை பூண்ட ஆடையை உடுத்து, (அத்தம் உளோர்) பொருள் உள்ளவர் தமக்கே காம இச்சை நிரப்பித் தினந்தோறும் தெருவில் (நேருறு நெறியாலே) பக்குவமான வழியிலே (கரைத்து) கூப்பிட்டழைத்து, (இதம்) நன்மை தரும் குயில்போல மொழி பேசுகின்ற மாதர்களின் வலைக்குள்ளே சுழலாதவகைக்கு உன்னுடைய திருவடியைத் துதிக்கின்ற வாழ்வே மனத்திற் பொருந்த இருந்து உண்டாகும் பத்திநிலை (சால்) நிரம்பியுள்ள அடியார்களின் (சபை) கூட்டத்தை மிக இழிவாகப் பேசும் குணம் கொண்ட பாவியாகிய நான், உயர்ந்த நற்கதியை அடுத்து நாடி, மேன்மை அடையவே உன்னுடைய திருவருள் ஒரு மொழி உபதேசிக்காதோ! (அல்லது மேன்மை அடையவே நீ அருளும் உபதேசமொழி எதுவோ) (வரைத்தனு) (மேரு மலையை (தனு) வில்லாக ஏந்தின திருக்கரத்தை உடையவர், நல்ல தவத்தை மேற் கொண்டவர்களின் உள்ளமாகிய இத்தி வாழ்கின்றவர் - ஆகிய சிவபிரானுடைய (திருமணி) சிறப் டி அழகும் கொண்ட கர்தில் மெய்ஞ்ஞானத்தை உபதேசித்த கூரிப்iேலனே! போற்றத்தக்க முத்தமிழை ஆய்ந்தவர், மேலோர், சொல்லியுள்ள திருவாசகம் - அழகிய உபதேச மொழிகளை (ஆடியார்கள்) மனத்தில் ஏத்துகின்ற, அழகு நிறைந்த், புகழ் விளங்கும் மணி மாடங்களை உடைய (செய்ப்பதி). அலைவீசிக் கடலுக்கு நிகரானதான காவிரிப் பெரு நதியின் வெள்ளம் பெருகிப் பாய்கின்ற வளப்பமுள்ள நீரால் பொலிவு விளங்கும் செழிப்புள்ள நெல், செந்நெல் (வாரிகளே) விளைவுகளே கும்பல் கும்பலாகப்