பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

690 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை 923. கதி பெற தனத்த தத்தன தானன தானன தனத்த தத்தன தானன தானன தனத்த தத்தன தானன தானன தனதான நிரைத்த நித்தில நீள்மணி மாலைகள் பொறுத்த வெற்பினை மார்முலை மேலணி நெறித்த நெய்க்குழல் வாள்விழி மாமதி முகமானார். நெளித்த சிற்றிடை மேல்கலை யாடையை யுடுத்தி யத்தமு ளோர்தமை யேமயல் நிரப்பி நித்தமும் வீதியில் நேருறு நெறியாலே, கரைத்தி தக்குயில் போல்மொழி மாதர்கள் வலைக்கு எளிற்சுழ லாவகை யேயுன கழற்று தித்திடு வாழ்வது தான்மன துறமேவிக் கதித்த பத்தமை சாலடி யார்சபை மிகுத்தி ழிக்குண பாதக னேனுயர் கதிக்க டுத்துயர் வாகவு மேயரு ளுரையாதோ வரைத்த நுக்கர் மாதவ மேவின ரகத்தி டத்தினில் வாழ்சிவ னார்.திரு மணிச்செ விக்குள் "மெய்ஞ் ஞானம தோதிய வடிவேலா. மதித்த முத்தமி ழாய்வினர் மேலவ ருரைத்து ளத்திரு வாசக மானது மனத்து t ளெத்தழ கார்புகழ் வீசிய மணிமாடத், # திரைக்க டற்பொரு காவிரி மாநதி பெருக்கெ டுத்துமெ பாய்வள நீர்பொலி செழித்த நெற்செநெல் வாரிக ளேகுவை குவையாகச்.

  • சிவபிரானுக்கு உபதேசித்தது

பாடல் 327-பக்கம் 314 கீழ்க்குறிப்பு. 1 எத்து ஏத்து # காவிரி - கடலுக்கு ஒப்பிடப் பட்டது - பாடல் 904-அடி 8 பார்க்க