பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வலுர்) திருப்புகழ் உரை 661 சுற்றித் திரிவது ல்லதென்று அவர்கள் வசப்பட்டு அவர்களைப் பின்ப்ற் வழிபடுகின்ற நட்பும் போதும் போதும், (உனது) ருள் அலைகள் வீசும் கடலின் கால்களின் துறை வழியில் செல்லும் அறிவை என்னுடைய உள்ளம் மகிழ்ச்சிபெற அருள் புரிவாயாக, (விருது) வெற்றிச் சின்ன முரசுகள் (பறைகள்) மொகு மொகு ம்ொகு என்று குமுற) பேரொலி செய்ய, கருடன் மேகம் விளங்கும் (உச்சியில்) ஆகாயத்தில் அகன்ற தனது இறகுகளைக்கொண்டு (பற்ையிட) வட்டமிட, பேய்கள் 5–LDTL-- தேவர்கள் ஹரஹர சிவசிவ சரணம் என்று ஒலி எழுப்பப் பொருந்திய சூரியனும், (இமம் முதிர்கரன்) பனி குளிர் நிறைந்த கிரணங்களை உடைய சந்திரனும் வலம்வர, (வினை) திச் செயலைக் கொண்ட அசுரர்கள் பொடிபட்டழியப் போர் செய்த கூரிய வேலனே! மருதமரம் நெறு நெறு நெறு என்று முறிபடும்படி உருண்டு சென்று உரலுடனே தவழ்ந்து சென்ற கண்ணபிரான் - திருமாலின் மருகனே (செவ் வனச்ம்) செந்தாமரை மலருகின்ற சுனையும், புலி நுழையும் குகையும் கொண்ட விராலி மலையில் வீற்றிருக்கின்று ஆறுமுகனே! குருபரனே! கயல்மீன்களும், (மயில்ை) மயிலை எனப்படும் மீன்களும், (மகரமும்) மகர மீன்களும் (உகள்) தாவித் திரியும் செந்நெல் (வயல்களைக் கொண்ட ஊரில்) வ்யலூர்ப் பதியில் இறைவனே! திரு அருள் பாலிக்கும் பெருமாளே! (அறிவினை .....மகிழ்வுற அருள்வாயே) 913. (உங்கள் பேச்சின் குரல்) குயிலின் குரலோ, உங்கள் கண் வேலோ, உங்கள் இடை கொடியோ, உங்கள் நடை - பெண் யானையின் நடையோ - இவ் வழகைத் தெரிந்து கொள்ளுங்கள், தனியாக வந்து நெருங்கிப் பழகுங்கள் , என்றெல்லாம் (வேசையரைப்) புகழ்ந்து பாடிக் கொ ஞ்சிப் பேசி, அவர்தம் காலைப் பிடித்தும், வாயிதழைக் கடித்தும், நகம் கொண்டு கீறியும், ஆடையைக் கலைத்தும், அல்குலைக் கலந்து திளைத்தும் (அனுப்வித்தும்), இரண்டு கொங்கைகள் மீதிலும்.