பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வயலுர்) திருப்புகழ் உரை 659 (அடம் இட்ட) சஞ்சாரம் செய்த செலுத்தப்பட்ட அல்லது பிடிவாதம் பிடித்த வேலை ஏந்திய வீரனே! திருவொற்றியூர் நாதர் (தலைவர்), சிவந்த (சிகா) சடையையும், நீல கண்டத்தையும், (பாரம்) பெருமையையும் கொண்டவரும் என்மீது அன்புள்ளவருமான மகா தேவர் - சிவபிராற்கு அருமையாக வாய்ந்த குரு) சுவாமியே! மாசில்லாதவனே! உருவமில்லாதவனே! மாயை, விந்து, நாதம் - வரங்களைத் தரும் சத்தி இவைகளுக்கு மேலான பரம்பொருளாம் (வஸ்துவே) பொருளே! (ஏகநாதனே)! மேலை வயலூர் என்னும் தலத்தில் வாழ்கின்ற தேவர் தம்பிரானே! (ஞானம் வந்து தாராய்) 912. ரத்தம், புழுக்கள், ஜலம், மலம், மயிர், மாமிசம் - சதை, இவை பொருந்திய உருவமாம் இவ்வுடல் எடுத்தது போதும் போதும், அழகொடு விளங்கும் பலவிதமான ஆபரணங்களும், நறுமண முள்ளனவும், ஆறுவித சுவைகள் கூடியுள்ளனவுமான சோறு, படுக்கை, குளிருக்கு அடக்கமான அறைகளை உடைய வீடு - இவைகளும் போதும் போதும், மனைவி, குழந்தைகள், (அனை) தாயார், கூடப் பிறந்தவர்கள் (தம்பிகள்), உறவு முறை கூறிக் கொஞ்சிக் குலவும் சுற்றத்தினர், இவர்களும் போதும் போதும், ஒரு நான்கு வேதங்களின் மார்க்கங்களை எடுத்துக் கூறும் சைவ சித்தாந்த நூல்கள் தவிர வேறு உலக சம்பந்தமான நூல்களை ஒதுதலும் போதும் போதும், விளங்கி நிற்பவனும், அழிவிலாதவனுமான உன்னை நினைப்பவர்களுடைய நட்புத் தவிர இனி அயலார்களிடத்தே தொடர்ச்சி. 4 அலம் அலம் - போதும் போதும். இங்ங்ணம் அல ம் அலம்' என வரும் பிறிதொருபாடல் 510. X மடை - சோறு. O சிவ கலை - சைவசித்தாந்த நூல்.