பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தனுர்) திருப் புகழ் உரை 629 திக்கு எட்டையும் அடக்கி வெற்றி கொண்டு, தேவர்களுக்கெல்லாம் (பணி கற்பித்து) வேலைகளைக் கட்டளையிட்டு - தேவர்களை வேலையிட்டு ஏவல் கொண்டு. கருணை என்பதே இல்லாத (கடின) மனத்துடன் அணுகிப் படைகொண்டு சண்டை செய்த சூரர்களின் (ரத்தத்தால் சிவந்த) புயங்கள் எல்லாம் அற்றுப் பூமியில் (புக)-விழும்படி, ஒப்பற்ற (சத்தி) வேற்படையைச் செலுத்தித் தேவர் தலைவனாம் இந்திரன் மனத்துயரம் நீங்கித் தனது ஊரைப் (பொன்னுலகைப்) பெறுமாறு அருளியவனே! . சங்குமணியை அணிந்த இழிகுலத்தளாம் குறமகள் வள்ளியின் பயத்தை நீக்கி, யானை எதிரில் வந்த சிறு வழியில் அவளைத் தன் மாட்டு அழைத்து அன்புடன் அணைந்தவனே! கங்கை நீரையும், பிறைச் சந்திரனையும் முடித்துள்ள சடைப் பெருமானுக்கு அருமைப் பிள்ளையே! விளக்கமுற்றுப் பொலியும் அத்திக்கரை என்னும் தலத்தில் விரும்பி வீற்றிருக்கும் பெருமாளே! (முத்திப் புணரிக்குட் புகவரம் அருள்வாயே) கந்தனுார் 901. (விந்து) சுக்கிலம் வெவ்வேறான உருவங்களாய் எல்லாத் திசைகளிலும் ஒளிபெறும் சராசரக் குலமும் (சரம் - அசையும் பொருள், அசரம் - அசையாப் பொருள்) என்னும் கூட்டமாய் (இவ் வுலகில்) வந்து காலம் கழித்து. (தொடர்ச்சி:) வருணன் - பன்னிரில் நறுமணம் கலந்து இடங்கள் தோறும் துவவேண்டும். ஈரத்தைக் காற்று துடைக்க வேண்டும். இந்திரன் - தேவர் கூட்டங்களுடனும் முனிவர் கூட்டங்களுடனும் வந்து இட்ட வேலையைச் செய்யவேண்டும். தேவர்கள் - நாள்தோறும் மீன்களை உணவுக்குக் கொண்டு வந்து சேர்க்கவேண்டும். கந்தபுராணம் 2-17-(1)-(9); 18-(3). 1 அக்கு - சங்குமணி.

  1. அத்தம் - சிறுவழி யானையை வரவழைத்து வள்ளியை அச்சமுறச் செய்து வள்ளியை அணைந்தது

பாடல் 680, 7:19, 748; 606-பக்கம் 400-கிழ்க்குறிப்பு.