பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பூத்துருத்தி திருப்புகழ் உரை 607 விரும்பத்தக்க (உரை) பேச்சுக்களைப் பேசி, ஆடையும் வேறாக, காம மயக்க ஆசையில் மகிழ் கூர்ந்து, ஒளி ப்ொருந்திய க்ண்கள் மேலிட்டுக் காதில் உள்ள குழைகள் மீது மோத வண்டின் கூட்டங்கள் மிக்குள்ள கரிய கூந்தல் (சாதா) சதா - எப்போதும் ஈறென வீந்து (விழுந்து) முடிவு வரைக்கும் விழுந்து (அல்லது வீறென விந்து-பொலிவுடனே விழுந்து), புட்குரல் ஒலியைக் கூவச்செய்து 455/TLD சாத்திர நூல்களை அறியும்படி பலவகையான (காம) லீலைகளின் பேதங்களை (வகைகளை) (நான்) (முயங்கும்) (முயங்குதல்) முயற்சி செய்தல் (ஆகா) கட்டாது. (ஊண்) ஆன்மா அனுபவிக்க வேண்டிய சுக துக்க நுகர்ச்சி - (புணர்ச்சி) கூடுதலும், மாயை சம்பந்தமாய் ஏற்படும் துன்பங்களும் ஒழிந்து, (உனக்கு) உன் திருவடிக்கே - (திருவடித் தியானத்தில்) எளிதான வகையிலேயே சிறந்த தவநிலை ஊன்றிப் பொருந்துவதற்கு மெய்ஞ்ஞான ஆசார ஒழுக்கத்தைப் பிரசாதித்து அருளுவாயாக (சைனமதக் கொள்கைகளை அநுட்டித்துத் தாங்கி நின்ற (நிர்ச்சரர்) சைன விரதத்தினராம் - சைனக் குருக்கள் மார்களின் (சேனா) கூட்டமாகிய (நீதர்) நீசர்கள் - (உன் ஆங்கு) ஆங்கு (மதுரையில்) உன் - உன்னுதலுக்கு ஏதோ தீங்குவ்ரப் போகிறதென்று நினைப்பதற்கு இடமாய் நின்ற ருத்ரகுமாரா - சிவகுமரனே! கோஷண தாண்டவற்கு - வாத்தியங்களின் கோஷத்துடன் - பேரொலியுடன் தாண்டவம் செய்யும் சிவபிராற்கு (உபதேசப் பொருளை) அருளிய (கேகிவாகன்) மயில்வாகனனே! உயர்ந்த வீரனே! சாங்கிபர் - ஆத்மதத்வத்தை விவரிக்கும் சாங்கிய யோகம் பயின்றவர்கள், சுகப் பிரமரிஷி, சி நாதர் - லகூழ்மியின் நாதர் (திருமால்), ஈசுரர் - சிவபிரான், தேவேந்திரன் மெச்சின வேலனே! (போதக) உபதேச குருவே! (சாந்த) சாந்த மூர்த்தியே! (வித்தக)ப் பேரறிவாளன்ே சுவாமியே! கடப்பமால்ை அணிந்த மார்பனே! சார்ங்க கைத்தல மாலோ டீச மகேந்த்ரர் மெச்சிய' எனவும் பாடங்கள் பிற பதிப்புக்களில் உள்ளன. (தொடர்ச்சி 608 ஆம் பக்கம் பார்க்க)