பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தஞ்சை திருப்புகழ் உரை 595 (விஞ்சுறுமா - விஞ்சுறுமாறு) நான் மேம்பட்டு விளங்கவும் உனது திருவடிய்ைச் சேரவும் ஒளிவகையில் உனது திருவருள் எனக்கு அருளாதோ! விஷத்தை அமுதாக உண்ட சிவபிரானுடைய நல்ல குமரனே உமை அருளிய குழந்தையே! சரண் நீயே எனக் கொண்டுள்ள அடியார்கள் வாழத் (தஞ்சை) தஞ்சாவூரில் வீற்றிருக்கும் பெருமாளே! (அருள் அருளாதோ) 888. கடலில் உள்ள கெண்டை மீன், சேல் மீன் இவை (ஒளித்து அஞ்சவே அஞ்சி-பயந்து ஒளித்திடுமாறு, ரத்னக் குழைகள் அள்வும் வீசி விள்ங்கும். அழகிய கண்களை உடைய மாதர்கள்பாற் கிடைக்கும் இன்பக் கடல்போன்ற நெருப்பில் முழுகும் காம விருப்பால் எம்பெருமானே! உன்னை நான் தியானிக்காத வண்ணம் என்னைப் பிரிக்கும் இந்திரஜாலம் (மாயவித்தை) போன்ற இந்த மயக்க அறிவு நீங்க-(நீ என்ன்ன) இங்கேவா என்று (ஆட்கொள்ளும்) முறையில் அழைத்து எங்கும் நிறைந்துள்ளதான உண்மைப் பொருளைத் (தந்தருளுக) உபதேசித்தருளுக; கொம்பு போன்ற மெல்லிய இடை, கொவ்வைக் கனி போன்ற வாயிதழ், மேகம் போன்ற கூந்தல், பருத்த மேரு மலை போன்ற கொங்கை - இவைகளை உடைய அழகிய வேட்டுவப்பெண் வள்ளியை (மணம்) கொண்ட அழகிய சற்குண வேலனே! (சம்பராரி) மன்மதனைக் கொல்வித்த நெருப்புக் கண்ணை உடைய (சம்பு) சிவனுக்கு உபதேசம் செய்த குருமூர்த்தியே! கடலில் இட்டவன் என உணர்ந்து (அக் குமரன்) அவனை (சம்பரணைக்) கொன்றான். இவன் முற் பிறப்பில் மன்மதன், மாயாவதி ரதிதேவி, சம்பரனைக் கொன்ற காரணத்தால் மன்மதனுக்குச் சம்பராளி எனப் பெயர். மீன் வயிற்றில் உதித்ததால் மீனக்கொடி (மன்மதனுக்கு). மன்மதனை எரித்தது - பாடல் 399, பக்கம் 510. சிவனுக்கு உபதேசித்தது - பாடல் 628, பக்கம் 462.