பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கும்பகோணம்) திருப்புகழ் உரை 547 தேவர்கள் வாழவேண்டி, ஒளிவீசுவதும் வலிமை கொண்டதுமான ம்ேருமலை (கிரவுஞ்சம்) கலக்குண்டு விழும்படிப் போர்புரிந்த ஒளி வேலனே! பஞ்சேந்திரிய வழிகளாலும் சிவபிரானை உள்ளத்தில் ஊறவைத்து (அழுந்தவைத்து)த் தவநெறியில் அன்புள்ள (தேவர்களை)ச் சிறையிலிட்ட அசுரர்களைக் கொண்டுபோய்க் கூர்மைகொண்ட (கழு) சூலம் அவர்கள் நெஞ்சில் ஏறிப் பாயவும், கழுகுகள் கொத்தி விளையாடும். படியும் அவர்கள் தலையை அரிந்தவனே! மேகங்கள் சூழ்ந்த அந்த வயல்களிற் சங்குகள் உலவிப் பரவும் (பரந்திருக்கும்) கும்பகோணத்தில் வீற்றிருக்கும் பெருமாளே! (தாளைத் தினமும் அருள்வாயே) 870. பஞ்சுக்கு ஒப்பானதும் நடனம் செய்வதுமான பாதத்தை உடையம்ாதர்களின் பாவம்(அல்லது குற்றம்) நிறைந்த உடம்புத் தோலிலே நான் படியாமல் செம்மையான சொற்கள் அமைந்துள்ள சித்ரத் தமிழால் = (அழகிய தமிழால்) உன்னுடைய செம்பொன்னுக்கு ஒப்பான அன்பைப் பெற மாட்டேனோ! ஐந்து மலர்ப் பாணங்களைக் கொண்ட மன்மதனைப் பொருதழித்த தேவர் (சிவபிரானது) (இடது) பாகத்தில் வாழ்கின்ற (பரா)சத்தியின் குமரனாம் தலைவனே! யானை-ஐராவதத்தால்வளர்க்கப்பட்ட தேவசேனையின் மலைபோன்ற கொங்கையை விரும்புவனே! கும்பகோணத்தில் வீற்றிருக்கும் பெருமாளே! (உன் ஆர்வத்தைப் பெறுவேனோ)