பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கும்பகோணம்) திருப்புகழ் உரை 543 (அசுரர்களின்) மனம் திகைக்கும்படியும் ஏழுகடல்களும் பொங்கி எழுமாறும், சிங்கம்போன்ற சூரனுடைய மணிமுடியிலுள்ள (செண்டு) பூச்செண்டை அழித்துத் தள்ளி விளையாடினமணிகட்டிய ஒளி வேலனே

இந்: அரி குந்தித் தாழ் - வண்டுகள் மொய்த்துக் குந்தி விரும்புகின்ற துளபமாலை அணிந்தவனும், செவ்விய இலக்குமியைச் சேர்பவனும் ஆன, (களபம்) கலவைச் சாந்து அணிபவனும்,மேக நிறத்தவனும் ஆன திருமாலின் மகள்ாம் வள்ளியை இப் பூமியின் கண்ணே கும்பிடும்பொருட்டுக் கைத்தாளம் போட்டு (அந்த) அழகிய பொன் - பொலிவு - உருவத்தவளாம் (அல்லது (பொன்) லக்ஷமியின் உருவ அழகைக் கொண்ட) பாவை வள்ளியைப் புகழ்ந்து போற்றின (அல்லது, வள்ளி புகழ்ந்து போற்றின) பெரும்ாளே! கும்பகோணத்தில் வீற்றிருக்கும் ஆறுமுகப் பெருமாளே! (எனக்கு அருள்வாயே) 868. துதிக்கையை உடைய முகத்தைக்தொண்ட ஆனையின் பெருத்த சொம்புபோல வெளித் தோன்றிக், காம இச்சைக்குச் சம்பந்தம் உடையதென மேலேழுகின்ற கொங்கையைக் கொண்ட பெருமை வாய்ந்த மாதர்கள் வண்டுகளின் கூட்டம், மலர்ச்சோலை, மேகம், இரவு, இருள், இவற்றின் கார் (கரு) நிறத்தைக்கொண்டு, (தொங்கல்) தோகை மயிலின் சாயல்-அழகு இதென்று சொல்லும்படியான கூந்தலை உடையவர்களாய் செம்பொன் இளகி விழுகின்றதோ என்னும்படியான மொழியுடன், சங்கின் வெள்ளொளி போன்று காமத்தை ஊட்டும் பற்களுடன், செவ்விய கயல்மீன் போன்ற கண்களாம் அம்புகள் கொண்டு (கண்ட ஆடவர்களின் மனத்தை) நொறுக்கிச் சிதற வைத்து ஆள்கின்ற இன்பத்தை ஊட்டும் சந்திரன் போன்ற முகத்தைக் கொண்ட (பாவையர்) பதுமை போன்றவர்கள், தித்திந்திம் எனப் பொருந்தி நடனம் ஆடுபவர் . அத்தகையோர் பொருட்டு நான் அலைச்சல் உறுவேனோ!