பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கும்பகோணம்) திருப்புகழ் உரை 541 கும்பகோணம் 867. சந்திரமண்டல ஒளியை முட்டி (அங்தே) அந்த செவ்விய ஒழுங்கான திரட்சியுள்ள சோதி ஸ்தம்பத்தின் நடுப்பாகத்தே தாக்குண்பதால் பெருகிவரும் இன்பரசப் பாலமுதம் (இன்பச்சுவை தரும் ப்ாலனைய அமுத ஊறலின் இனிய சுவையை) மேவு (மேவி) அனுபவித்து. எண் குணம் கொண்ட இறைவன் நடனம் இயற்றும் நில ஒளிவீசும் பெருமை வாய்ந்த இடத்தைத் தரிசித்து, அங்கே எந்தை, சிவபிரான் நடனஞ்செய்து கூத்தாடும் அழகிய சபையின்கண் (கந்தம்) கூட்டமான (எழுத்தோடு,று) ஐம்பத்தொரு அகூடிரங்களோடு (அல்லது பெருமை மணம்கொண்ட பிரணவ் எழுத்தோடு) (சித் கெந்த மண) அறிவு என்கிற மிக்க நறுமணம் கொண்ட (பூ இதழை இதழ்ப் பூவை-ஞான் இதழ்கொண்ட மலரை-ஞானவாசம் வீசும் நறுமணப் பூவை - கண்டு களித்து (அறிவ்ை அறிவால் அறிந்து அமுத்க் கடலில் முழுகி (ஆனந்தவாரியில்) Lā அந்த நறுமணத்தைப் போற்றிசெய்து, ஆயிரத்தெட்டு அண்டங்களையும் வளைத்துக் கொண்டுள்ள (புவனக் கண்டமதை) ஈரேழுபுவனப் பகுதிகளை - பதினாலுலகங். களையும் காணும்படி எனக்கு அருள்புரிவாயாக திந்த திமித் தீதகுடட் டுண்டுமிடட் டாடுடுடிட் டிந்தம் என்று எக்காளம், மணிகள், (தவில்) மேள வகைகள் இவைகளின் ஒசை O கந்த மதித்து கந்தவேளே (நீ) நன்கு மதித்து - என்பது ஆசிரியர் திருவிளங்கம் அவர்கள் உரை.

  • ஆயிரவெட் டண்டமதைக்கோல் புவனக் கண்டமதைக்காண அமுதவாரி உண்டு உலகு ஈரேழு கண்டு விளையாடி லோகங்கள் வலமதாட அகில புவனாதியெங்கும் வெளியுற' என வருவன காண்க . திருப்புகழ் 766, 179, 141-பார்க்க

இனி, ஆயிரத்தெட்டு அண்டம் அதை என்பதற்கு - ஆயிரத்தெட்டு இதழோடு பொருந்திய கமலத்தை உடைய துவாத சாந்த வெளியை எனவும், கோல் புவனக் கண்ட மதை' என்பதற்கு அழகிய அந்த துவாதசாந்த வெளியை - எனவும் பொருள் கொள்வர் ஆசிரியர் திருவிளங்கம்