பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1094

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவிடைமருதூர்) திருப்புகழ் உரை 535 கடுகுபோலப் பொடிப் பொடியாய்த் தவிடுபடும்படி மந்திரமும் தந்திரமும் பயின்று வந்த அசுரர்களின் உட்ல்களைப் பிளந்தும், (அம்பரம்) கடல் கதறி நிரம்ப ரத்த று பொங்கி ஒடும்படியான களிப்புக்கிடமான நிறைவை ந்ே: உணவ்ைக் கண்டு) அப்போர்க்களத்தில் சேரும்படி கழுகும், நரியும், (கொடி) காக்கையும், கருடனும் அங்கு வந்து கூடி எங்கும் நிற்கவும், பேய்கள் பல (கூடி) - (திமிலை) பம்பைமேளம் ஒருவகைப் பறை கொண்டு தந்தனம், தந்தனம் என (கருதியிச்ை) இசை கருதி - இசைகளைக் கருதி எழுப்பி, (பொசியும்) (நிணத்தை) உட்கொள்ளும் (நசை) ஆசையைப் பார்த்துப் பார்த்து மகிழ்ச்சியுறுகின்ற பரிசுத்த வேலனே! வெற்றி விளங்கும் திருவிடைமருதுாரில் வந்து பொருந்தியிருக்கும் குணத்திற் சிறந்த குருபரனே! குமரனே! யானைகள் போய் (அடங்கும்) உறங்கும் - துரங்கும் (வள்ளிமலைக்) காட்டில் வாசஞ்செய்த குமரி - வள்ளியின் சந்தனம் விளங்கும் கொங்கையிற் படியும் திருமார்பனே! சிவந்த ரத்னங்கள் ஒளிவீசி விளங்கும் தண்டைகள் அணிந்த அழகிய தாமரை போன்றதும், கருணை பொழிவதுமான கழல்களின் (திருவடிகளின்) அழகே (நமக்குத்) (தம்பம்) பற்றுக்கோடாம் என்று (அல்லது திருவடிகளே நமக்கு முடிவான பற்றுக்கோடாமென்று) (உணர்ந்து) (உறுதி பூண்டு) (நெறி அழகு பெற வருடி). அந்த நன்னெறியையே அழகு வாய்க்கத் தடவிப் பற்றி (மெதுவாகக் கைப்பிடித்து) . தேவர்களும் தொண்டு பூண்டுள்ள தம்பிரானே! (தவநெறியில்.பண்படும் கங்கணம் சிந்தியாதோ) முத்திதந் தருளிடு தலங்கள்..அனேகம் உண்டு.அவற்றிடைமருததிக மாய்க் குலவும். யாதினாலெனில் அநாதியா யிலங்கலின்" -மருதவனப் புராணம் தலவிசேட 28, 13 இவ்வாறு இத் தலத்தின் பெருமை முருகவேளால் வசிட்டராதிய முநிவர்களுக்கு எடுத்து ஒதப்பட்டது. மதுரையில் வரகுண பாண்டியனுக்கு உற்ற பிரமகத்தி தோஷம் திருவிடை மருதூரில் விலகிற்று - (வரகுணனுக்குச் சிவலோகம் காட்டிய திருவிளையாடல்).