பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1072

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பந்தணைநல்லுர்) திருப்புகழ் உரை 513 வாசனைத் தூள்களைப்பூசித் தம்மீது படும்படி யனைத்து, இன்பகரமான பேச்சுக்களுடன் கூடிய செயல்கள்ால் உண்டாகின்ற காம மயக்கில் படுகின்ற துன்பம் நீங்க, ஒளி வீசுகின்ற (உனது) (காலில் அணிந்துள்ள தண்டைகள் கலின் கலின் கலின் என்று ஒலிசெய்ய, கிண்கிணியானது கிணின், கினின், கினின் என்று ஒலிசெய்ய, அருளைப்பாலிக்கும் கொலுசும், சிலம்பும் அசைந்தொலிக்கத் திருவுள்ளத்தில் அன்பு கூர்ந்து (நீ) எப்போதும் என்முன்) வந்து. பெருமை தங்கிய நறுமணமுள்ள தாமரையன்ன திருவடிகளை என்னுடைய பொல்லாதவினை, கவலை, மலம் (ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்கள்) இவை யாவும் அழிந்து போம்படி அருள்புரிவாயாக; அடியார்கள் சரணம் சரணம் சரணம் என்று வணங்கவும், ஊது கொம்புகள் குகும் குகும் குகும் என்று ஒலி செய்யவும், துந்துமி வாத்தியம் (பேரிகை திமிந் திமிந் திமின் என்று ஒலி செய்யவும், இவ்வாறு (அணுகிக் குறுகும் ஒசை அதிக (சுந்தரி) அழகி தேவசேனையைத் திருமணஞ்செய்த பராக்ரமம் உள்ள கந்தனே! (அல்லது) அழகிய வள்ளியை மணஞ்செய்த திறல் வாய்ந்த கந்தனே! அந்தக் குறக்கொடியாம் வள்ளி தங்கியிருந்த அரிய வனம் (தினைக்காடு) உள்ள பரிசுத்தம் வாய்ந்த வள்ளிமலையையும் காத்துத் தேவர்கட்கு துன்பத்தை மிகவும் விளைத்த பன்டர்கள் - வண்டர்கள் - (மிண்டர்களாகிய) அசுரர்களுடைய கைகள் அறுபட்டொ ழிய (கண்டவ) செய்தவனே! ப்ரசண்ட (மிகச் சிறப்புவாய்ந்த) குஞ்சளி (ஐராவதயானையால் வளர்க்கப்பட்ட) தேவசேனை வளர்ந்த அழகிய பசுமைவாய்ந்த கற்பக மரக்காடுகள் உள்ள தேவலோகத்தைப் (புரந்து) காத்தளித்து (அகழ்) அகழியும் (எயில்) மதிலும் பக்கத்தில் சூழ்ந்துள்ள.