பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காஞ்சீபுரம்) திருப்புகழ் உரை 95 (சுடுகாட்டுக்குச்) சென்று அங்கே (பிணத்தைச்) சுட்டுவிட்டுச் சுடலையினின்றும் வெளியேறி வருகின்ற அந்தப் பேதைமை வாய்ந்த துக்கம் நீங்காதோ! நித்தனே (என்றும் உள்ளவனே) விசித்திரம் நிறைந்த மயில்மீது (விளங்கி )நிற்பவனே! (அல்லது-விசித்திரம் வாய்ந்த மயில் போன்ற வள்ளியைப் பெறும் பொருட்டு அவளருகே நிற்பவனே): கச்சிக் குமரேசனே! கொடுமை வாய்ந்த சூரன் கேடு அடைந்து (கடலிடையே) ஒடப் போரினைப் பெரிய கடலிற் செய்தவனே! முத்து ஹாரம் (மாலை) அணிந்த தோளில் வெண் காந்தள் மலரைத் தவறாது இஷ்டத்துடனே அணிபவனே! முற்றாத நித்தனே (முதுமை வராத நித்தனே) என்றும் இளையோனாய் என்றும் இருப்பவனே! அத்தனே! பரிசுத்தனே! முத்தனே! வீடுபேறுள்ளவனே! முத்தியைத் (தரும்) பெருமாளே! (துக்கம் அறாதோ) 484. கொவ்வைப் பழம் போலவும் சுத்தமான பவளம் போலவும் சிவந்த வாயிதழ்களை (உதட்டினை) உடைய (கொடி போன்ற) மாதர்களுடைய அழகிய ரவிக்கை அணிந்துள்ளதும், முத்து மாலை அணிந்ததுமான கொங்கையை விரும்பி (அணைந்து) பாப காரியங்களுக்குத் தக்கவையான செயல்களைச் செய்து திரியாமல் (உன்னைப்) பாடிக் புகழப், பத்தி நிறைந்த உள்ளத்தை எனக்குத் தந்தருள வேண்டும். (சூரன் என்கின்ற) மாமரத்தைக் குத்தி வெறுத்து அடியோடு கொன்று போர் செய்த வேல் ஏந்தியவனே!