பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1008

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாகபட்டினம்) திருப்புகழ் உரை 449 வாள்போல (சரம்) அசைகின்ற கண்ணானது பொருந்திய (காதில் உள்ள) குழைகளைத் தள்ளும் அம்பு என்னும்படியும், (அளகபாரம்) கூந்தற் பாரத்தில், தொங்கல்-பூமாலையை அணிந்துள்ள பெண்களின் முகங்கள் சந்திரனையும் (வாகை) வெற்றி கொண்டன என விளங்க, வாயிதழும், தாமரை இதழ்போல விளங்க, (களம்) கழுத்து:சங்குபோல விளங்க, காதலை எழுப்பும் மஞ்சள் பூசப்பட்ட தோளும், கிளியின் முகம் (மூக்குப்போன்ற) நகங்களும், பட்டாடை அணிந்து துவட்சி அடைந்துள்ள இடையுடனே, இன்பரசம் பொதிந்துள்ள (தாழி) பாண்டம் என்று சொல்லத்தக்க அல்குலும், தழைத்துள்ள (அரம்பை) வாழை என்னும்படியான தொடைகளையும் உடைய ரம்பை என்னும் தெய்வப்பெண் போன்ற மாதர்கள். காலில் உள்ள சதங்கை, கொலுசு, சிறந்த சிலம்பு இவைகளைப் பூண்டு அழகிய நடனத்தைச் செய்யும் (அல்லது டல்கள்.காமலீலைகள் செய்யும்) அழகிய பெண்கள் T. င္ဆို႔ေျ2/ காமதாகம் கொண்டு நான் திரிந்தபோதிலும் போற்றப்படும் உனது திருவடிகளை நான் மறக்கமாட்டேன்; வீர (வெண்டையம்) காலணி ஒலிக்க, (வரி) இசையை எழுப்பும் (அல்லது-ஒழுங்கான வரிசையில்) சங்கு முரசு, அழகிய பறை இவை பேரொலி செய்ய, பிரமனும், தேவர்களும், வேதம் ஒதவல்ல (விஞ்சையருடன்) கலைஞானம் உள்ளவருடன் (குமுற) கலந்து ஓசையை எழுப்ப, வெந்து அழிய దేఫ్గ குரனுடைய (விறு)கொழுப்பு - கர்வம் - அடங்க, மேகமும் (கமற) மிக ஒலிக்க (அல்லது சூடேறிவேக), விஷத்தைக்கொண்ட ஆயிரம் யானையின் பலம்கொண்ட ஆதிசேடனுடைய(குவடு) மலையன்ன உச்சிகள் (கொளுந்த) வேக (அசுரர்களின்) பல தலைகளை அறுத்தெறிந்து நடனம் கொண்ட வேலனே! நரசிங்க வடிவத்தைக் கொண்டு, கடுமை கொண்ட இரணியனை நடுங்கவைத்து நடனம் செய்து, இலங்கையில் வலிமை வாய்ந்த ராவணனுடைய கூட்டம் அடங்கி அழிய கோதண்டம் என்னும் வில்லை ஏந்திய கரங்களை உடைய திருமால் பெற்றமூல