பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/938

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று - செங்கோடு திருப்புகழ் உரை 465 பூங் கொத்துக்கள் உள்ள திணைப்புனத்தி னிடத்தே பொருந்திய அந்தக் குறப் பெண்ணுடன் விளையாடல் செய்து அவளைக் கும்பிடுதற்கு ஒரு கொண்டாட்டம் (பெருங்களிப்பு) கொண்டு அவளை அணைந்தவனே! மலையிற் கடப்ப மலர் மலரும் வாசனைப் பிரசித்தத்தை வளைத்துக் கொண்ட (கீர்த்தியைத் தனக்கென்று கொண்ட) கொங்கு நாட்டுத் திருச்செங்கோட்டில் வீற்றிருக்கின்ற பெருமாளே! (பொது மகளிர்க்கு H= இரக்கங் காட்டுவ தொழிவேனோ) 377 உண்மையான புகலிடம் (ஆதார தானத்தை) விட்டு விட்டு, பொய்யான துணையைப் பற்றிக்கொண்டு, நிச்சம் ஆர் (நிச்சார்) - எப்பொழுதும் (நிச்சம் - எப்பொழுதும், அல்லது மெய்யாகவே) நிறைந்த துன்பமே உள்ள பிறப்பு என்னும் கடலைத் தாண்டிக் கரை ஏறி அப்புறம் போக முடியாதபடி (தேம்) தேனும் (இவர்கள் சொல்லுக்கு) மட்டே (இனிமையிற் குறைவே) என்று சொல்லத்தக்க அந்த தத்தையர் (கிளி போன்ற பொது மகளிரின்) மீது பிச்சாய் (காம வெறியாய் - பைத்தியமாய்), உச்சாகி (உச்ச நிலையிற் சேர்ந்தவராகி) அல்லது கவர்ச்சி உடையவர்களாகி, போர் (கலவிப் போரில்), எய்த்தார் - இளைத்தவர்கள், பத்தார் (பத்தர்களின்), வில், பொன் கழல் (ஒளி பொருந்திய, அழகிய, திருவடிகளைப்) போற்றிப் பணிந்து-(அந்த நல்ல தொண்டால்)