பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/936

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று - செங்கோடு திருப்புகழ் உரை 463 376 மெதுவாகக் கடைக் கண்ணைக் காட்டுவர், நறுமணமுள்ள கூந்தல்ைப் பின்பு காட்டுவர், த்சள் அணிந்த அழகை (அல்லது மஞ்சள் நிறம் கூடிய பொன்னாபரண்ங்களை)க் காட்டுவர் - காமப்பற்று உள்ளவர்போல வஞ்சனை செய்து தங்கள் இரக்கத்தைக காட்டுவர், நெஞ்சகத்துப் பொருத்தம் (அன்பு) உள்ளவர் போல்க் காட்டுவர், வளப்பம் பொருந்திய பற்களின் பாகங்களைக் காட்டுவர், கொங்கையாம் பாரமுள்ள அழகிய மலையையும் காட்டுவர், கொப்பூழின் சுழியை (வளைவைக்) காட்டுவர், சங்கு போன்ற கழுத்தைக் காட்டுவர், தந்திரமாகச் சண்டையிட்டு ஊடுதலையும் (மாறுபட்டுக் கோபித் தலையும்) காட்டுவர், முதலிற் காட்டிய ட்ட (ம்) நேசம்) త్థశతా (குன்றுதலைக்) காட்டுவர்; அத்தகைய பொது மகளிர் பால் இரக்கம் (அன்பு - தயை) காட்டுவதை விடமாட்டேனோ! கட்டப்பட்ட எருக்கம் பூவை நில வணிந்த சடையின் கண் சூடுபவரும், உழையூைப் பாகத்தில் உடையவருமான தகப்பன் (தந்ன்தயாம்) சிவபிரான் தான்ளத் தொழுகின்ற குரு நாதனே! பசிய பொன்னாலாய பதக்கத்தை அணிவித்த அன்பனை எதிர்த்து வந்த (அல்லது, அன்பன் 鷺 ുഖങ്ങങ്ങ് எதிர்த்து வந்த) பன்கவர்கள் தோல்வியுறும்படிபோய் அவர்களைப் புறங்காட்டி ஒடச் செய்த வயலூரனே! (முன் பக்கத் தொடர்ச்சி) நல்லியக் கோடன் வரலாறு. இவன் தன் பகை மிகுதிக்கு அஞ்சி முருகக் கடவுளை வழிபட்டான் எனவும், அப்பொழுது முருகவேள் அவன் கனவில் தோன்றி ஊரில் உள்ள ஒரு கேணியிற் பூத்த பூவைப் பறித்துப் பகைவர் மீது விடுக்குமாறு கட் யிட்டன. ரெனவும், அந்தப் பூவைத் தன் வேலாக முருகவேள் நிருமித்துத் தர, அந்த வேலைச் செலுத்தி நல்லியக்கோடன் பகைவரை ஓடச் செய்தான் எனவும் அறியப்படுகின்றது. வேல் (464ஆம் பக்கம் பார்க்க)