குன்று - சிராப்பள்ளி திருப்புகழ் உரை 353 337 குவளை மலர் போன்றும், போர் புரியும் அழகிய கயல் மீன் போன்றும், விடம் போன்றும் உள்ள மை பூசிய் கண்களை உடைய மாதர்களின் குமுதம் போன்ற வாயிதழ் அமுதத்தைப் பருகி, ஒலி பொருந்தும் காடை (குறும்பூழ் என்னும் பறவை), யில், புறா, மயில், செம் போத்து, வண்டு, அன்னம் அழகிய கோழி - இவைதம் குரலை நிகர்க்கும் என்று சொல்லத் தக்க (புட்) குரலைக் காட்ட, ரண்டு தங்கக் குடம் என்னும்படியான கொங்கைகள் புளகிதம் கொள்ள, பவள ரேகை போன்ற வாயிதழிற் குறி உண்டாகப், பாம்பின் படம் போன்ற அல்குலை அணைந்து, கை பரிசம் (தொடுகை), தாடனம் (தட்டுகை) முதலிய உடல் கொண்டு செய்யும் தொழில்களைக் காம நூலின் (கொக்கோக சாத்திரத்தின்) றப்படி செய்து உருக்கிக், கூடித் தன் வசமழிந்து, (1് షీ போன்ற மீே றுச் ಫ್ಲಿ ன்ற ஆசைக் கடலில் அழுந்துதலைத் தவிரேனேர்! வெண்ணிறங் கொண்ட சரசுவதி, இலக்குமி, இரதி, இந்திராணி, கிருத்திகை மாதர், அரம்பையர்கள் (ஆதிய) கூட்டத்தாரால் வணங்கப்படுகின்ற துர்க்காதேவி, பயங்கரி புவனேசுரி, சகல காரியங்களுக்கும் காரணமாயிருப்பவள், சத்தி, முதலாம் தேவி, '! ಸಿ ಣಿ தி: அழுக்கற்றவள், சமயங் க்குத் தலைவி, உருவ மில்லாதவள், சிவனது பரிக்கிரக (அங்கீகாரம், பற்றுகை) ரூபையான கிரியா சக்தி, எம் தாய், சிவன் தேவி, மநோமணி (மனத்தை ஞான நிலைக்கு எழுப்புபவள்.) அறிவு ரூப ஆனந்த கெளரி, வேதத்திற் சிற்ப்பாக எடுத்து ஒதப்பட்டவள், அம்பிகை, திரிபுரை (பிங்கலை, இடைகலை, சுழுமுனை என்னும் மூன்று நாடிகளிலும் இருப்பவள்), யாமளை (சியாமள நிறத்தை உடையவள்) ஆகிய பார்வதி அன்புடன் பெற்றருளிய முருகனே (குழந்தையே)!
பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/826
Appearance