பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/769

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

295, முருகவேள் திருமுறை 15ஆம் திருமுறை "வள்ளிச்சன் மார்க்கம் tவிள்ளைக்கு #நோக்க வல்லைக்கு ளேற்று மிளையோனே. வள்ளிக்கு ழாத்து வள்ளிக்கல் காத்த வள்ளிக்கு வாய்த்த பெருமாளே. (5) 318. சமயவாதத் துன்பு அற தய்யத்த தாத்த தய்யத்த தாத்த தய்யத்த தாத்த தனதான வெல்லிக்கு வீக்கு முல்லைக்கு வீக்கு வில்லிக்க தாக்க ருதும்வேளால். வில்லற் றவாக்கொள் சொல்லற்று காப்பொய் யில்லத் துறாக்க வலைமேவு: பல்லத்தி வாய்க்க அல்லற் படாக்கை நல்லிற் பொறாச்ச மயமாறின். "வள்ளிச் சன்மார்க்கம்:- இதற்கு வள்ளி அநுட்டித்த நன்னெறி" என்பது பொருள். வள்ளி அதுட்டித்த நிலைதான்" தன்னை மறந்தாள் தன் நாமங் கெட்டாள் தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே." என அப்பர் சுவாமிகள் குறிப்பிட்ட நிலை; இதனால் பெறப்படுவது யாதோ எனின் - "யாரொருவர் தன்னை யிழந்து (யான் - எனது என்பன அற்று)த் தலைவனை நாடுகின்றனரோ அவரை இறைவன் தானே நாடிவந்து அருள்புரிவான்" என்பது. வள்ளியம்மை கைப்பற்றி ஒழுகின இந்த நன்னெறியே இறைவனை வசப்படுத்தக் கூடிய நெறி என்றும், இந்த ரகசிய நெறியைத் தான் முருகபிரான் சிவபிராற்கு உபதேசித்தனர் என்றும் அருணகிரியார் இந்தப் பாட்டில் வெளியிடுகின்றார். இதன் விரிவை அருணகிரிநாதர் வரலாறும் நூலாராய்ச்சியும்" என்னும் எனது நூலில் பக்கம் 299.302-பார்க்கவும். t விள் ஐக்கு - வினவிய தாதைக்கு. # நோக்க வல்லைக்குள் - நோக்கம் - கண்ணொடிப் பொழுது, (கண் இமைக்கும் நேரம்); வல்லை. வல்லே - விரைவில். ஒரு கூடிணநேரம் தவநிலையில் இருந்து சிவபிரான் முருகவேளிடம் உபதேசம் பெற்றாராதலின் திருத்தணிகைக்கு கூடிணிகாசலம் (கணிக வெற்பு) எனப் பெயர் போந்தது. (அடுத்த பக்கம் பார்க்க)