பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/766

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று - வள்ளிமலை திருப்புகழ் உரை 293 எல்லையையும், வேதங்கள் சொல்லித் தொழுது வணங்கும் எல்லையையும் அணுகாது விலகித்தாண்டி, உன்னுடைய அருள் பாலிக்கும் திருநாமத்தை இகழ்ந்து பேசுதற்கு ஆசை கொண்டு, தமது) உள்ளத்தில் கடவுளே அபயம் என்னும் இரக்க உணர்ச்சியை என்றும் எண்ணப் பெறாதவர்களாய் இருக்கின்ற கீழ் மக்களது இணக்கத்தை (நட்பை) விட மாட்டேனோ! இரவில் (இருளில்), அந்த ஆனை (கணபதி) தந்து உதவின கொடியன்ன வள்ளிக்கு 驚 நாயகிக்கு) அவளது மார்பு விளங்கும்படித் தாமரையாலாய (உனது) மார்பிலிருந்த மாலையை அணிந்தவனே! (இருளில் வள்ளியை அழைத்துச் சென்று மணந்தவனே) சேறு படாத கங்கை யாற்றில் (சரவண) மடுவில் தங்கி அங்கு மெல்லத் தாமரை மலரில் வீற்றிருந்த (பயின்ற) தலைவனே! திருவல்லம் என்னுந் தலத்தில் வீற்றிருக்கும் குமரனே! கந்தன்ே தில்லை (சிதம்பரத்தில்) உள்ளவரும், திரிபுரத்தை எரித்தவருமான சிவனது மைந்தனே! மல்யுத்தப் போருக்குப் பொருந்திய (திரண்ட) பன்னிரண்டு புயங்களைக் கொண்ட வீரனே! வள்ளிக் கொடிகளின் கூட்டம் நெருங்கிய வள்ளிமலை மேற்சென்று வள்ளியம்மையைப் பெற வேட்டையாடிய (அல்லது விருப்பங் கொண்ட) பெருமாளே! (உள்ளப் பெறார் இணங்கை ஒழிவேனோ) முன் பக்கத் தொடர்ச்சி கோயிலுக்கு வடமேற்கு 10 மைலில் உள்ள முருகன் கோயில் பாடல் 707 - 713 பார்க்க. tt மல்லேபுரி பன்னிருவாகு அநுபூதி 29,