பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/755

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

282 முருகவேள் திருமுறை 15-ஆம் திருமுறை தார்மெத்திய தோரண மென்தெரு "தேர்சுற்றிய வார்பதி அண்டர்கள் தாமெச்சிய நீள்தணி யம்பதி பெருமாளே.t (63) 312. அகப்பொருள் தரிசனம் பெற தத்ததன தத்ததன தத்ததன தத்ததன தத்ததன தத்த தனதான வெற்றிசெய வுற்றகழை விற்குதைவளைத்துமதன் விட்டகணை பட்ட விசையாலே. வெட்டவெளி யிற்றெருவில் வட்ட#பணை யிற்கனல்வி ரித்தொளிய ரப்பு மதியாலே, பற்றிவசை கற்றபல தத்தையர்த மக்கு Sமிசை பட்டதிகி ரிக்கு "மழியாதே. பத்தியையெ னக்கருளி முத்தியைய எரித்துவளர் பச்சைமயி லுற்று வரவேணும்: நெற்றிவிழி பட்டெரிய நட்டமிடு முத்தமர்நி னைக்குமண மொத்த கழல்வீரா. தேர் சுற்றிய ஊர் தணிகை என்றதனால் அருணகிரியார் காலத்தில் ரதோற்சவம் நடந்தது தணிகையில் என்பது தெரிகின்றது. பல ஆண்டு. களுக்கு முன் மலைமேல் உள்ள ரத வீதியில் ரதோற்சவம் நடந்து வந்தது. பல் ஆண்டுகளாகத் தேர் இல்லை. தேர் ஒன்று செய்து ரதோற். சவத்தை மீளச் செய்வித்தல் அன்பர்களின் கடமையாகும். t இந்தப் பாடலில், முருகன் திருவடி சேவல், மயில், வேல் இவை வரும் பான்மை கவனிக்கற்பாலது.

  1. பணை - பறை. $ இசைபட்ட திகிரி - புல்லாங்குழல்; திகிரி மூங்கில் “மன்மதன் கணை, நிலவொளி, பெண்கள் வசைப் பேச்சு, குழல் ஓசை இவை காமம் மிக்கார்க்கு வேதனை தரும் - (பாட்டு 218.பார்க்க).