பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/754

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று திருத்தணிகை திருப்புகழ் உரை 281 சேவலங் கொடியுடன் மயில் மீது நீ ஆரோகணித்து (ஏறி) அறிஞர்கள் பாடிய உனது புகழ் நிறைந் துள்ள, ஒளிச்சோதி கோடி யெனும்படி வீசுகின்ற திருவடியைப் பாலித்தருளுக; போர்க் கோலம் பூண்டெழுந்த சூரர்களின் (அசுரர்களின்) தலைகளை வீரத்துடன் (இந்தப்) பூமியில் அரிந்து, (அப்போர்க் களத்தில்) எழுந்துள்ள பூதகணங்களும், காக்கைகளும் (அல்லது பூத கோடிகள்) (களத்தில்) ரத்தத்தை உண்ணும்படி செ லுத்தின வேலனே! பாக்கு மரங்களின் (கமுக மரங்களின்) குலைகள் சாய்ந்து விழும்படி மிருது (உடல்) வாய்ந்த கயல்மீன்கள் தாவ, அந்தக் குலைகள் வீழ்வதால் கீழுள்ள வாழைக் குலைகளும், நெருங்கிச் செழிப்புடன் வளர்ந்துள்ள செந்நெற் கதிர்களும், உதிர்ந்து விழும் வயல்கள் (கோடிக் கணக்கானவைகளும்) பலப்பலவும், சாரற்கிரி (கிரிச்சாரல் - மலைச் சாரல்) தோறும் எழுந்து வளர்ந்துள்ள சோலைகளும், துரத்தே கண்டு தொழுபவர்களுடைய வினையைத் தொலைக்கும் பொன் மயமான கோபுரங்- களும், மண்டபங்களும், சூழ்ந்துள்ள (தணிகையம்பதிப் பெருமாளே)! (முன் பக்கத் தொடர்ச்சி) (ii) பூரீசைலம் (திருப்பருப்பதம்) சேண் பார்த்தவர்க்கு வீடருள் சீபர்ப்பத நற்றலம்" (ஞானவரோதயர் உபதேச கண்டம் 1166) (iii) திருவாரூர் ஆளுரைத் தூரத்தே தொழுவார் வினை தூளியே" (அப்பர் - V -7-9). ’ "தாது பொன்.