பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருச்செந்தூர்) திருப்புகழ் உரை 59 நஞ்சு போன்ற கண்களையுடைய மகளிர் கொங்கை யின்பத்தில் அன்புகொள்ளும் தொழிலன் (நான்) தகுதியுடன் பொருந்திய உயிர் வெந்தழிந்து, உடலும் இன்பத்தை இழக்க, அறிவிலாத வழிப்போக்கில் நெருங்கும் தோழன் (நான்), செவ்விதாய் நீடித்துள்ள மிக்க பொன்னொளி இலகும் அழகு பொருந்திய செந்தில் (திருந்செந்தூர்) என்று திே, உள்ளம் உருகி வருகின்ற அன்பு இல்லாதவன் (நர்ன்):நூலாராய்ச்சி இல்லாத்வன் (நான்); (அத்தகைய எனக்குப்) பொருந்திய (உன்) இரண்டு பாத தாமரைகளைத் தந்து, மகிழ்ந்து உன் உள்ளம் அன்பு கொள்ளாதோ? படம் விளங்கும் பாம்பின் உடலையும் அங்கங்களையும் பிளவுபட்க்கிழித்து உதறுகின்ற ஒப்பற்ற மயிலின்மீது எழுந்தருளி வந்து தேவர்களுடைய பகையாழ் அசுரர் எல்லாருடைய உடல்களும் பிளவுண்டு பிளவுண்டு (போம்படி) கோபத்தை வெளிப்படுத்திய வேலா! (அல்லது) பிளவுண்டு (உங்கு ஹதம்) அவ்விடத்தில் கொல்ைபுரிந்த வேலனே! மண்ணவரும் விண்ணவரும் நின்று வணங்கும் எண்குணத் தன், பழம் பொருளாம் இறைவன், உருவம் இலாதவன், அன்பர் பங்கில் இருப்பவன், பெரிதும் துன்பம் செய்து வந்த புரங்கள் எரியும்படி திறந்த செங்கண்ணன், கங்கை (மான் போன்ற) மாது வாழ்கின்றசடையின்மீது அழகாகப் புனைந்த கொன்றையும், குணம் கொண்ட இளமதியின் (நிலவின்) குறைத் துண்டத்தையும், செங்கையில் ஒள்ளிய-எல்லா உலகங். களையும் ஒழிக்கவல்ல பெருங் கோபங் கொண்டுள்ள நெருப்பையும் கிளர்ந்து உயர்ந்தஉடல் கொண்ட இடபத்தையும் பாம்பையும் கொண்ட வருடைய தூய அழகிய பக்கத்தில் நின்று உலகெலாம் அளிக்கும் கவுரியுமை கொங்கை (ப் பால்) தந்து அன்பு கொள்ளும் தமிழ் வல்லவனே உயர்ந்த பரமனாம் சங்கரன் கும்பிடும் தம்பிரானே! (பங்கயந் தந்துகந்து அன்பு றாதே ) o