பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/743

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

270 முருகவேள் திருமுறை 15-ஆம் திருமுறை மெச்சிக்கு றத்திதன மிச்சித் தணைத்துருகி -- மிக்குப் பணைத்த மணிமார்பா, tமத்தப்ர மத்தரணி மத்தச்சடைப்பரமர் சித்தத்தில் வைத்த கழலோனே. வட்டத்தி ரைக்கடலில் மட்டித்தெ திர்த்தவரை வெட்டித் துணித்த பெருமாளே. (58) 307. அன்பைப் பெற தனதனன தனதந்த தனதனன தனதந்த தனதனன தனதந்த தனதான முலைபுளக மெழஅங்கை மருவுசரி வளைகொஞ்ச முகிலளக மகில்பொங்க அமுதான. மொழிபதற வருமந்த விழிகுவிய மதிகொண்ட முகம்வெயர்வு பெறமன்ற லணையூடே கலைநெகிழ வளர்வஞ்சி யிடைதுவள வுடலொன்று படவுருகி யிதயங்கள் ப்ரியமேகூர். கலவிகரை யழியின்ப அலையிலலை படுகின்ற கவலைகெட் நினதன்பு பெறுவேனோ, அலையெறியு மெழில்சண்ட உததிவயி றழல்மண்ட அதிரவெடி படஅண்ட மிமையோர்கள். அபயமென நடுநின்ற அசுரர்பட அடியுண்டு அவர்கள்முனை கெடநின்று பொரும்வேலா! "வள்ளியை அணைந்ததால் பணைத்த (பெருமை அடைந்த மார்பினர் ஆயினர் முருகவேள் ஏனெனில் - தன்கடன் அடியேனையுந் தாங்குதல்' என்ற அப்பர் திருவாக்கின்படி என் கடன் பணிசெய்து கிடப்பதே' என்றிருந்த வள்ளியைத் தன் கடமையென அணைந்து மகிழ்வித்தாராதலின், குறமாதுடன் மால் கடனாம் எனவே அணைமார்பா" என்றார் பிறிதோரிடத்து. (திருப்புகழ் 563) t மத்தப் ப்ரமத்தர் - மிக்கப் பித்து உடையார் "பித்தா பிறை குடி" சம்பந்தர் -1893, சுந்தரர் VII-1-1.

  1. மத்தம் - ஊமத்தம். மத்தநன் மலர் புனைவிரே'III 94-8