பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/722

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று திருத்தணிகிை திருப்புகழ் உரை 249 298 போர் புரிவது போல் அமைந்து, அம்பைத் (தனது) கூர்மைக்கு முன் நேர் நிற்க முடியாது வெருட்டித் தள்ளி, மிகுதியானதும் செறிந்து நெருங்கி வந்ததுமான (ஆலகால) விடத்தை வென்று அழித்து, மிகக் கூர்மை கொண்ட வாள். போலத் தாக்கிக் காதிலுள்ள குழைக்குள் ஒடிப் (பாய்ந்து), (கண்டவர் தம் உயிரை) வெட்டி (உடலைத் தொளைத்துப். போக இன்பத்தைத் தன்னிடம் நிரம்பத் தாங்குகின்ற (கொண்டுள்ள) கண்ணை உடைய பொது மகளிர் மேல் ஆசை வைத்து, உள்ளத்தைக் கலக்கும் மோகத்தைக் கொண்டு, அதனால் துயரத்துக்கு உள்ளாகி, மிகவும் களைத்து, உள்ளம் குலையாமல் (அழியாமல்) வேதத்தின்கண் (வேதங்களில்) விரும்பிப் போற்றப் படுகின்ற உனது புது மலர் அணிந்துள்ள அழகிய திருவடியை நான் போற்றிச் சுகம்பெற ಧಿ#Ý. (மலர்களின்) நறுமணம் கொண்டு விளங்குகின்ற உனது இணையடிகளைப் பற்றிய பக்தர்கள் - பொருட் பெண்டிராகிய வேசைகளின் கண் எனும் சிறைச்சாலையில் அடைபட்டு அழியாமல். நல்வாழ்வை அடையும் பொருட்டு - அந்தப் பக்தர்களை ஆளும் ப்ொருட்டுப், புறப்பட்டு ரத்ன ரேகைகள் (வரிகள்) ப்ோலப் பிரகாசிக்கும் நிறம் கொண்ட மயிலின் அழகிய கழுத்தில் வரும் வீரனே! s -- ஒளி வீசும் முத்துக்கள் சிதறுண்ண, ஒலையாலாய பரண்மீது புகுந்து வீற்றிருக்கும், பெருமை வாய்ந்த அழகிய குறத்தி ನಿಘೀ கணவனே! வேல் கொண்டு கையில் (கையில் வேலாயுதத்துடனே) நீலோற்பலம் மலர்கின்ற தணிகை மலையில் மகிழ்ந்து வீற்றிருக்கும் செவ்வேள் எனக் கூறிப் புகழும் கருத்துள்ள அடியார்கள் தம் பெருமாளே! (பொற் பதத்தை யான் வழுத்திச் சுகிக்க அருள்வாயே)