பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/707

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234 முருகவேள் திருமுறை 15-ஆம் திருமுறை 'முக்கறை மட்டைம காபலtகாரணி ஆர்ப்பந கைப்படு முளியு தாசனி மூர்க்க குலத்திவி பீஷணர் சோதரி முழுமோடி முத்தவ ரக்கணி ராவண னோடியல் பேற்றிவி டக்கம லாலய சீதையை மோட்டன் வளைத்தொரு தேர்மிசை யேகொடு முகிலேபோய், மாக்கன சித்திர கோபுர நீள்படை வீட்டிலி ருத்திய நாளவன் வேரற மார்க்கமு. டித்தவி லாளிகள் நாயகன் மருகோனே. வாச்சிய மத்தள பேரிகை போல்மறை வாழ்த்தம லர்க்கழு நீர்தரு நீள்சுனை வாய்த்ததிருத்தணி மாமலை மேவிய பெருமாளே. (43) "இந்தப் பாடலின் 5-6-7 அடிகள் ராமாயண விசயத்தைச் சுருக்கிக் கூறுகின்றன. இராவணன் தங்கை சூர்ப்பனகை ராமரைக் கண்டு காதல் கொண்டு தன்னை மணஞ்செய்யுமாறு வேண்ட, அவர் உடன்படாமையால் அவள் கோபித்துச் சீதையை எடுத்துச் செல்ல முயன்றாள். அது கண்ட இலக்குமணர் சூர்ப்பணகையின் மூக்கு முலைக்கண்கள், காதுகளை அறுத்துத் துரத்தினார். அவள் அழுது கொண்டு போய் ராவணனிடத்தில் சீதையின் அழகை யெல்லாம் அவனுக்குக் காதல் விளையுமாறு பலவாறு வர்ணித்து, அவனுக்காகத் தான் சீதையை எடுத்துவர முயன்றதாகவும் அப்போது ராமன் தம்பி தன்னை அவ்வாறு பங்கப்படுத்தினதாகவும் கூறி நீ போய் அவளைக் கவர்ந்து வா எனத் தூண்டி விட்டனள். "பூமாண் குழலாள்தனை வவ்வுதி போதி" என்றாள் (கம்பராமா. மாரீசன் வதை 153) அங்ங்ணமே, ராவணன் சீதையைக் கவர்ந்து வந்து தனது இலங்கையில் அசோக வனத்தில் ராட்சத மாதர்களின் காவலிற் சிறை வைத்தான். பின்னர் பூரீ ராமர் ராவணனுடன் போர் செய்து அவனை மடிவித்துச் சீதையைச் சிறையினின்றும் மீட்டார். அடுத்த பக்கம் பார்க்க