பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/700

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று - திருத்தணிகிை திருப்புகழ் உரை 227 289 பூங் கொத்துக்களைக் கொண்ட நெடிய குராமரத்தின் அடியிலும், அடியார்களுடைய இதய தாமரையின் நடுவிலும், துறைகள் பல கொண்ட வேதத்தின் சிறந்த உச்சியிலும் வீற்றிருக்கும் குருநாதனே! கொங்கு நாட்டில் உள்ள அழகு தரும் பழநியில் ஆறுமுகனே! திருச்செந்தூரில் தேவசேனாபதியே! தணின்கயில் இணையில்ாதவனே! ஒன்றோடொன்று கொத்திக் கா' எனக் கூவும் (காக்கைகள் போல) ஒருவரோ டொருவர் எதிர்த்துப் பேசும்படி வருகின்ற சமய மாறுபாடு கொண்ட தந்திர மிக்க வாக்கு வாதத்தினர் பெறுதற்கு அரிதானதும் பிறர் எவராலும் சந்திக்க முடியாததும், தனக்கு வேறு ஒப்பானதில்லை எனக் கூறும் தகைமையதாய் வருகின்ற ஒரு குரு பரம்பரையாக வந்த உபதேசம் இது என்று மொழிந்தருளி நறுமணமுள்ள கடம்ப மலர் விளங்குவதும் தலங்கள் கந்தரலங்காரத்திலும், அந் தாதியிலும் பாராட்டப்பட்டுள. |திருப்புகழ்ப் பாடல்கள் 439, 540, 844, 845 பார்க்க மனம், வாக்கு, காயம் மூன்றாலும் முருகனைப் பணிவதற்கு மனத்தால் திருச்செந்துரையும் (செந்துர் கருது (கந்தரந்தாதி - 33), செந்திலை உணர்ந் துணர்ந் துணர்வுற (திருப்புகழ்47)) வாக்கால் பழநியையும் ("படிக்கின்றலை பழநித் திருநாமம் (கந்தரலங்காரம் - 75), காயத்தால் தணிகையையும் (தணிகைக் கும்ர! நின் தண்டையந்தாள் சூடாத சென்னியும், நாடாத கண்ணும், தொழாதகையும், பாடாத நாவும் எனக்கே தெரிந்து படைத்தனனே' (கந்த்ரல்ங்கார்ம்-76) வணங்குதல் நன்றென உபதேசித்துள்ளார்.

  • கொண்டு தானென மொழிதரு அறுசமயவிரோத' என்றும் பாடம் அருணகிரியார் காலத்தில் சமய வாதங்கள் பலமாய் நிகழ்ந்தன போலும்: சமயவாதிகள் செய்யும் கூச்சலை.

கொந்துகா என மொழிதர வரு சமய விரோத தந்த்ர வாதிகள்" என்ற இப்பாடலிலும், "சாகரம் என முழங்கு வாதிகள்" (திருப்புகழ் 674) என்றும், சங்கைக் கத்தோடு (சந்தேகக் கூச்சலோடு), சிலிகிடு. சட்கோல சமயிகள் (945) என்றும், கல கலகலெனக் கண்ட பேரொடு சிலுகிடு சமயப் பங்க வாதிகள் கதறிய வெகுசொல் (960) என்றும் பல இடங்களிற் கூறி. 229ம் பக்கம் பார்க்க