பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/696

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று - திருத்தணிகை திருப்புகழ் உரை 223 (சுக்கிரீவனை) காந்தள் மலர் மாலையை அணியச் செய்து (வாலியின்) எதிரே போருக்கு அனுப்பி ஒப்பற்ற அந்த வாலி என்னும் குரங்கரசை அவன் கவசத்துடன் அழியக் கொன்ற காண்டிபம் என்னும் வில்லை ஏந்திய அச்சுதன், உத்தமமான நற்குணம் வாய்ந்தவன் ஆகிய பூரீராமபிரா னுடைய (திரு. மாலின்) மருகனே! (உன்மீது) விருப்பம் வைத்த வேட்டுவப் பெண்ணை (மயக்கி) வெற்றி பெற்று ஏற்றருளிய (அடைந்த) இளையோனே! மா, பலா, வாழை என்னும் மூவகைப் பழங்களையும், சர்க்கரை யையும் மொக்குபவரும் (iாரி உண்ப்வரும்), வள்ளிமலைக் கானில் (காட்டில்), க்னி க(ன்)ணி யாகிய வள்ளியின்_முற்கு (முன்னர்) வந்த (வேண்டுவார்க்கு வேண்டியதை அளிக்கும்) கற்பக விருட்சம் போன்றவரும், கருநிறங் கொண்ட கரி (ஆனை முகவருமான) விநாயகமூர்த்திக்கு இளையவனே! இனிமையுள்ள தினையை விதைத்த வேடர்கள் வருவதை அறிந்து, தனி வேங்கை மரத்தின், இலை கொண்ட வேங்கை மரத்தின், -91էՔ3, விளங்க நின்றவனே! தேன் போல இனிக்கும் சொற்களை உடைய வள்ளியைச் சேர்வதற்காக (அவளிருந்த) அந்தத் தினைப்புனத்தைச் சேர்ந்து அங்கு இருந்தவனே! ஆகாயத்தைத் தொடும்படி உயர்ந்த மூங்கிலின் கூட்டத்துக்கு அருகே நெருங்கி நிற்பனவும், பொன்போல ஒளிர்கின்றனவுமான குவளை மலர்கள் சுனையிற் சுற்றிலும் (எங்கும்) மலர்தலைக் கொண்ட திருத்தணிகை ஊரில் உள்ள மலைமீது வி ற்றிருக்கும் பெருமாளே! (எப்படி நற்கதி புக்கிடல் அருள்வாயே)