பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/642

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று - திருத்தணிகை திருப்புகழ் உரை 169 ஜாக்கிராதி மலா வஸ்தைகளும் தத்துவ சேஷடைகளும் ஒடுங்க, (எனது) ஆணவ மலத்தை நீக்கி, என் உள்ளே (ஞானப்) பேரொளி பரவ, நல்ல உனது திருவருளை ஊட்டி, உனது அடியிணைகளை அருளுகின் [D gρ(05 நாள் எனக்குக் கிடைக்குமா! படைத்து எல்லாவற்றையும் வினையுற செயற்படச் செய்து காப்பாற்றி அல்லது வினை வழியே நடராசப் பெருமானுடனிருந்து அவைகளை அழித்த கற்புடையாள், மரகத நிறத்தினள், ஒப்பற்ற பரவெளிக்கு மேலே நடனம் புரிகின்ற உமாதேவி அருளிய இளையோனே! பகைத்து வந்த அசுரர்கள் யமலோகத்தை அடையும் படிப் போர் செய்த சக்கரம், சங்கு ஏந்திய திருக்கரத்து அழகர் மியாகிய பாண்டத்தை வயிற்றில் அடக்கிய பெரியோர் ஆகிய j மருகனே! திடுக்கிடக் கடல் (கடல் திடுக்கிடவும்), அசுரர்கள் முறி பட்டோடவும், சேர்ந்துள்ள திசைக் கிரிகள் (அஷ்டதி சைக்கிரிகளும்) பொடிபடவும், ஒளிவேலைச் சீராகச் செலுத்திவிட்டு, ஒரு நொடிப்போதில் (உலகை) வலம் வந்த மயில் வீரனே! தினைப்புனத்திலிருந்த இரண்டு கொங்கை மலைகளைக் கொண்ட குமரி (அல்லது - தினைப்புன லட்சுமி, கொங்கை மலைகளைக் கொண்ட குமரி), நல்ல குறச்சாதி முத்து (வள்ளியுடனும்), சசி (இந்திராணியின்) மகள் தேவசேனையு. டனும் (யாவரும்) புகழும் (புகழ்கொண்ட) திருத்தணிகைப் பதியில் மலைமேல் நிலை பெற்றிருக்கும் பெருமாளே! (உன் அடியிணை அருளுவ தொருநாளே).