பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/628

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று - திருத்தணிகை திருப்புகழ் உரை 155 சுற்றமும் பற்றும் ஒழித்துத் தனிமையை விரும்பித் தனித்தவம் மிகச் செய்யும் தன்மையாளரின் தனிமை நீங்க (அல்லது - திக்கற்ற அடியார்களின் திக்கற்ற தன்மை நீங்க) நாள்தோறும் ஒப்பற்ற மயிலில் ஏறிவந்து அவர்களுக்கு (உதவும்) பெருமாளே! (ஐம்புலச் சுற்றங்களை ஒழித்த தனியார்க்கு நாளும் பிர்சன்னமாயிருக்கும் மயிலேறும் பெருமாளே! எனலுமாம்); (திக்கற்றவர்க்குத் தெய்வமே துணை என்னும் பழமொழியின் உட்பொருளும் ஈண்டு உணரற்பாலது.) (மயிலேறும் பெருமாளே குளிர் தொடை நீ தந்து அருள்வாயே!) 262 கரிய கூந்தலை விரித்தும், வெளித்தோன்றும் கயல்மீன் போன்ற கண்களை விழித்தும், யானை போன்றும் மலைபோன்று முள்ள கொங்கைப் பாரத்தை உடையவராய் கையில் அணிந்துள்ள வளையல்களும் (கழுத்தில் அணிந்துள்ள) (பொற்) சங்கிலி மாலைகளும் ஒலி செயச் செய்தும், மேகலை அணிந்துள்ள புடைவையைப் பள பளப்புடன் உடுத்தும், (தம்மைப்) பணிந்தொழுகும் (ஆடவர்களை) ஏற்று (அங்கீகரித்து), அவர்களது உள்ளத்தை அழிக்கும் வஞ்சகர்களாம் (பொது மகளிரின்) இணக்கத்தை (சகவாசத்தை தொடர்பை) நீக்கி, உனது உள்ளம் மகிழ்ச்சி மிகக் கொள்ளும்படி (நான்) தவக் கடலில் குளித்து, இப்பொழுதே உனக்கு அடிமை பூண்டு, உன் தலத்தில் (தணிகையில்) இருக்கும் படியான பாக்கியத்தை நான் பெறும்படியாகக் (கண்) பார்த்தருளுக. திரிபுரத்தை எரித்து, அழகிய யானையை உரித்து, ஒளி வீசும் திருநீற்றையே ஆபரணமாகக் கொண்ட (அல்லது திரு நீற்றையும் பாம்பையும் கொண்ட) என் அப்பன் சிவபெருமானுக்குக் குருநாதனே!