பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/616

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று - திருத்தணிகை திருப்புகழ் உரை 143 சிறப்புறும்படி தனி நின்று (மேம்பட்டு) அறநெறி கூறும் தமிழின் (எல்ல்ையில்) உய்ர்ந்த (வட) தின்சயிலிருக்கும் சிறப்பைப் பெற்றுள்ள திருத்தணிப் பெருமாளே! (பிறப்பறக் குறிக் கருத்து எனக்களித் தருள்வாயே) 256 எனக்கென்றே எல்லாம் சேகரிக்க வேண்டி நாள்தோறும் இளைப்பு:உண்டாகும்படி (உழைத்து), காலக்கணக்கில் ஒய்வு இல்லாமல் - (அல்லது ஒய்ந்து போய்) எடுக்கின்ற தேகங்களைக் கொண்டு (தேகங்களை அடைந்து) பின்னர் இறந்துபோம் லஜ்ஜை (வெட்கம்) அழிய, என் பிறப்பு ஒய்வு உற (பிறப்பு அற) உன்னைப் பல நாளும் திருப்புகழ் கூறிப் புகழ்வோர்கள் இருக்கும் இடத் துக்குச் சென்று (அங் (அவ்வடியார்கள்) வி ளக்கும் அறிவுரைகளை (ஞான வாசகங்களை) ஒட்டி ஒழுகி (அந் நன்னெறியில் நின்றும்) விலகாது, (அல்லது, நீ எனக்கு உபதேசித்த ஞானோப தேசத்தினின்றும் விலகாது), ಳಿ வீசும் அழகிய (உனது) திருவ்டியை நானும் தொழுவேனோ (தொழும் பாக்கியம் எனக்கும் கிட்டுமா!) - தொழிலில் திறமையுடன் அன்று எதிர்த்து அம்பு எய்த வீரனாம் மன்மதன் (வெந்து) விழும்படி அந்தக் கொடிய மன்மதனைக் - கொன்று எரித்தவனாகிய சிவபிரான் - (உன்னை நோக்கிக் - குழந்தாய்!) நீயே (பிரணவப் பொருளை) விளம்புவாயாக (உரைப்பாயாக) இனி, என்று கூற, (முதலில் உன்னை வணங்காது), இடக்கு (முரண்) செய்த பிரமனும் விரும்பி மகிழ வேதப் பொருள்ை உரைத்தவனே! கோபத்துடன் சூரனைக் கடுமை கொண்ட வேல் கொண்டு (அவனுடைய) சிரத்தைத் தள்ளி ஒதுக்கின முருகோனே! தினைப் புனத்தில் வாசஞ் செய்த குறப் பெண் (வள்ளியுடன்) திருத்தணிகையில் வீற்றிருக்கும் பெருமாளே! (ஒன் பொலச் சரண் நானுந் தொழுவேனோ!)