பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/594

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று - திருவேங்கடம்) திருப்புகழ் உரை 121 சங்கையும், சக்கரத்தையும், தாமரை போன்ற கையிற் பற்றிப் போர் புரியும் மாயன் (திருமால்) நரிக்கும் வாளுக்கும் எரிக்கும் விருப்பம் உண்டாகும்படி அழிந்து பேர்கின்ற அரக்கர்களுடைய குடலை உணவாக இடுதலைச் செய்த (உணவாகத் தந்த) திருமால் (நரகாசுரனுக்குப் பகைவன்)அத்தகைய திருமாலுக்கும் ஒப்பற்ற திருமகளுக்கும் (அல்லது அத்தகைய திருமாலின் ஒப்பற்ற அழகிய) மருமகனே! ரவிக்கை (தைத்து) கட்டி அழகாக முடிபோட்டு பட்டுத் துணிக்குட் பட்டதாய் (பட்டு ரவிக்கை யிட்டதாய்) அமுதம் பொதிந்து அசைவதாய், கரும்பின் ரசத்தையே உருச் செய்து வைத்திட்டதாய், பருத்த கொங்கைகளின் நறுமணத்தில் முழுகும் பன்னிரு புயனே! கனக திவ்விய. மணி. (பொன்னாலாய- திவ்யமான-) (மேன்மையான) ரத்தினங்களை அணிந்த மார்பனே! கையில் (விளங்கும் ) சத்தி வேல் ஆரவாரஞ் செய்து நன்றாக (முழுமையும்) பட்சிக்க (உண்ணும்படி), வாத்திய முழக்குடன் வந்த அசுரர் தலைவனாம் சூரனைக், கறுநிறமுடைய அரக்கர் குலத்துடன், கோபித்து (அழித்த) இளையவனே! வழிகள் பக்கங்களில் உள்ள காடுகள் குழும் வடமலை (வட வேங்கடமலையில்) உறைகின்ற பெருமாளே! (வழிபடல் ஒழிவனை அருள்வாயே) 246 கோங்கின் முகை, இளநீர் இவை யிரண்டும் தோற்கும் படிப் பெருகி வளரும் கொங்கையும், செலுத்தப்பட்ட வேல் போன்ற விழியும்இருள் மிகுந்த கூந்தலும், பெரிய வளையல்களை அணிந்துள்ள காந்தள் மலர் போன்ற கைகளும், நூல் (போல நுண்ணிய) இடையும், மாந்தளிர் போன்ற மேனியும் (ஆகிய இவை தமை) மிகவும் விரும்பிப்- -