பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/560

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்புகழ் உரை 87 233 ஒலிக்கின்ற கழலணிந்த திருவடியைப் பணிந்து அடியேன் உன்னிடம் சரணாகதி அடைவது எப்போது - நிலை காண்பதற்கு (இந்த நிலையாத சமுத்திரமான சமுசாரத்தில் பிழைத்திருக்கும் நிலையைக் காண்பதற்கு நீயே தஞ்சமென உன்னிடம் நான் என்று சரண் புகுவேன்.) - (என்னுடைய) உள்ளத்தில் நீ வீற்றிருந்து அருள் கூர்ந்து -- (எனக்கு நேரும்) இடையூறுகளும் (துன்பங்களும்) கலக்கங்களும் அஞ்சி என்னைவிட்டு அகல அருள் புரிவாயாக; நிகர்ப்பவர் ஒருவர் இல்லாது நடனம் செய்கின்ற இறைவனுடைய (சிவனுடைய) (ஒரு பாகத்தில் (உறையும்) உமாதேவியின் குழந்தையே! தலங்கள் எல்லா இடத்திலும் வீற்றிருந்து விளையாடிப் பலமலைகளிலும் வீற்றிருக்கும் பெருமாளே! (இடர், சங்கைகள் கலங்க அருள்வாயே!) 234 ஏழு என விளங்கும் பூமிகளை ஒரு நொடிப் போதில் அழகு விளங்க மயிலில் வலம் வந்தவனே! தேவர்கள் போற்றி செய்து (உனது) திருவடியைத் தொழ, அசுரர்கள் மாளும்படிக்குச் செலுத்திய ஒப்பற்ற வேலாயுதனே!