பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/524

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவேரகம் திருப்புகழ் உரை 51 "நல்லொழுக்கத்தை மறைக்கும் பணம், (ஆதலால்) பணத்தில் ஆசையில்லை" என்று சொல்லி நித்திரை செய்யும் போதும் கூடப்படுத்துக் கிடக்கும் அன்புடையவர் போல நடித்து - முதலிற் காலையும் (பின்னர் குடுமி) மயிரையும் பிடித்துச் சண்டையும் ஊடலும் நாளுக்கு நாள் அதிகப்படுமாறு ஒழுகி வருத்துகின்ற வகைக்கு வந்து சேரும் - (மாதர் தம்) காம கலகத்திற் சிக்குதலால் ஏற்படும் வருத்த மாகிய ஒரு தொடர்பில் (உன் அடிமையாகிய நானும் கலக்கம் அடையலாமா! (அடையலாகாது என்றபடி) ஏலம், இலவங்கம்(கிராம்பு) ᎧᏂᏗ☾ᎠᎦᏖ, சுரபுன்னை, மகிழமரம், தோட்டங்கள், கமுக மரம், மருதமரம், செழிப்புள்ள அலரி (இவை) யாவையும் தனது அலையில் அடித்துத் தள்ளி வருகின்ற காவிரி (அயலிலே) வெளிப்புறத்தே சூழ்ந்து செல்லும் திரு ஏரகம் (சாமிமலை) என்னும் தலத்தில் விற்றிருக்கும் பச்சை மயில் வீரனே! (பூஞ்) சோலையில் உள்ள பூ இதழால், சக்ரவாள ᎯrfᎸ ஆகிய பெரிய மலைகளின் (சிறகுகளை) அரிந்த குலிசாயுதம் கொண்ட கரத்தனாம் இந்திரன், வணங்கும் திருக்கை வடிவேலனே! அச்சத்தை நிரம்பத் தரும் கிரவுஞ்ச மலையையும் கடலிடத்தையும், பகைத்து வந்த சூரன் உடலையும் அழித்த பெருமாளே! (காம ... துவக்கிலே அடிமையும் கலக்கம் உறலாமோ)