பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 முருகவேள் திருமுறை (1 திருமுறை விடத்தை வென்றிடு படைவிழி கொடுமுள மருட்டி வண்பொருள் கவர்பொழு திணில்மயல் விருப்பெ னும்படி மடிமிசை யினில்விழு தொழில்தானே விளைத்தி டும்பல கணிகையர் தமது பொய் மனத்தை நம்பிய சிறியனை வெறியனை விரைப்ப தந்தனில் அருள்பெற நினைகுவ துளதோதான் குடத்தை வென் றிரு கிரியென எழில்தள தளத்த கொங்கைகள் மணிவடம் அணிசிறு குறக்க ரும்பின்மெய் துவள் புயன் எனவரு வடிவேலா! குரைக்க ருங்கடல் திருவணை எண்முனம் அடைத்தி லங்கையின் அதிபதி நிசிசரர் குலத்தொ டும்பட ஒருகணை விடுமரி மருகோனே! திடத்தெ திர்ந்திடும் அசுரர்கள் பொடிபட அயிற்கொ டும்படை விடுசர வணபவ திறற்கு கன்குரு பரனென வருமொரு முருகோனே! செழித்த தண்டலை தொறுமில கியகுட வ்ளைக்கு லந்தரு தரளமு மிகுமுயர் திருப்ப ரங்கிரி வளநகர் மருவிய பெருமாளே ! (7) 8. அருள் பெற 'கருவடைந்து பத்துற்ற திங்கள் வயிறிருந்து முற்றிப் பயின்று கடையில்வந்து தித்துக்கு ழந்தை வடிவாகிக் கழுவியங்கெ டுத்துச்சு ரந்த முலை உயருந்து விக்கக்கி டந்து கதறியங்கை கொட்டித்த வழ்ந்து நடமாடி 1. இப் பாடலின் பிற்பாதி இராமாயண வரலாறு கூறும் 2. அருந்துவிக்க அருத்த ஊட்ட