பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/452

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

436 முருகவேள் திருமுறை (3- திருமுறை பலபல பைம்பொற் பதக்க மாரமு மடிமைசொ லுஞ்சொற் றமிழ்ப்ப னிரொடு பரிமள மிஞ்சக் கடப்ப மாலையு மணிவோனே. பதியினில் மங்கைக் கதித்த மாமலை யொடுகில குன்றிற் றரித்து வாழ்வுயர் பழநியி லன்புற் றிருக்கும் வான்வர் பெருமாளே (87) 186 - A வணங்க தனத்ததன தான தந்த தனத்ததன தான தந்த தனத்ததன தான தந்த தனதான மனக்கவலை யேது மின்றி உனக்கடிமை யேபு ரிந்து வகைக்குமது நூல்விதங்கள் தவறாதே. வகைப்படிம னோரதங்கள் தொகைப்படியி னாலி லங்கி மயக்கமற வேத முங்கொள் பொருள்நாடி, வினைக்குரிய பாத கங்கள் துகைத்துவகை யால் நி னைந்து மிகுத்தபொரு ளாக மங்கள் முறையாலே. வெகுட்சிதனை யேது. ரந்து களிப்பினுட னே நடந்து மிகுக்குமுனை யேவனங்க வரவேணும்: மனத்தில்வரு வோனெ என்று ணடைக்கலம தாக வந்து மலர்ப்பதம தேய ணிந்த முநிவோர்கள். வரர்க்குமிமை யோர்க ளென்பர் தமக்குமண மேயிரங்கி மருட்டிவரு சூரை வென்ற முனைவேலா. 'மங்கை கதித்த மா மலை - வள்ளி மலை, கதித்தமலை என்னும் பெயரை உடைய முருகர் கோயில் கோயமுத்துார் ஜில்லா ஊற்றுக்குழி ரெயில்வே ஸ்டேஷனுக்கு அருகில் உள்ளது. மங்கை யென்பது விஜயமங்கலம்' என்னும் தலத்தைக் குறிக்கும் என்பர். விஜயமங்கலம் ஈரோட்டுக்கும் திருப்பூருக்கும் மத்தியில் உள்ள ரெயில் ஸ்டேஷன். ஸ்டேஷனுக்கு வடக்கே 2 மைலில் ஊர். திருப்புகழ் 940 ஆம் பாடலையும் பார்க்க(விஜயமங்கலம் கதித்தமலை இவைதம் விளக்கத்தைச் செந்தமிழ் செல்வி சிலம்பு 13. பக்கம் 237 - 239 பார்க்க.)