பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/447

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழகி திருப்புகழ் உரை 431 உருகி, உடலெலாம் மெத்தத் கொதித்து வாடி..(அதனால் வரும்) வினைக்குட் கலங்கி நொந்த பாதகனாகிய எனக்கு உன் திருவடிகளைத் தொழும்படியான ஞான் இன்பத்தைத் தந்தருளுவாயாக; அருமை வாய்ந்த தேவர்கள் பொன்னுலகிற் குடியேறவும், கொடியவர்களான அசுரர்களின் உடல்கள் அழியவும், வெற்றியுடன் போர்புரிந்த மிகக் கூரிய வேலாயுதனே! அரகரா என்னும் பேரொலியுடன் அன்பர்கள்! சூழச் கடுமை வாய்ந்த ஒப்பற்ற மயில்மேல் அன்று நீ 鷺 பூமியை ஒரு நொடியில் வலம் வந்த காரணன்ே (அல்லது) பூமிக்கு ஒரு நொடியில் வந்த காரணனே (காரணமாய் வந்த முருகனே!) பருத்த கயிறுகொண்டு அன்னை (தாயான அசோதை) வீசிக் (கட்ட) உறியில் தோய்ந்திருந்த தயிரை உண்டு விரும்பி (விரும்பியுண்டு) பசியது கெட் அருள் பூத்த கண்ணனின் (திருமாலின்) மருகனே! மிகச் சிரேஷ்டமான (ஷண்முக) நதி பக்கத்திற் சூழ்ந்து நெருங்கத் தாமரையின் அழகிய லேர்களில் வண்டுகள் உலாவ (விளங்குகின்ற) பழநி மாமலையில் எப்பொழுதும் வீற்றிருக்கின்ற பெருமாளே! (உனதுதாள் தொழுதிட இன்ப ஞானமி'தருள்வாயே) யிட்டனர். இடும்பன் அப்படியே வடக்கே சென்றான். அகத்தியர் உணர்த்திய மந்திர சக்தியால் பிரமதண்டம் தோளுக்குத் தடியாகவும் அஷ்ட நாகங்களும் கயிறாகவும் இடும்பன் முன்னிலையில் தோன்ற அவன் அகத்தியர் குறித்த அந்த இரண்டு மலைகளையும் காவடிபோலக் கட்டித் துக்கித் தெற்கு நோக்கி வந்தான். வரும்போது ஆவினன் குடியில் அவன் அந்த மலை இரண்டையும் இறக்கி இளைப்பாறினான். பின்னர் எடுக்க முயன்றபோது அவனால் எடுக்க முடியவில்லை. ஏனென்று அவன் பார்த்தபோது சிவகிரியின்மீது அழகு பொலியும் ஒரு சிறுவன் இருக்கக் கண்டான். இடும்பன் அவனை அம்மலையை விட்டுப் போகச் சொன்னான். சிறுவன் (முருகவேள்) இஃது எமது இருக்கை, யாம் போகோம்' என மறுத்தனன். இடும்பன் கோபித்து அந்தச் சிறுவன்மேற் பாய்ந்தான் பாய்ந்தவன் தடால் என விழுந்து மூர்ச்சையானான்.