பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பரங்குன்றம் திருப்புகழ் உரை 27 செல்வம் பொருந்தி விளங்கிய இடையர்களின் மனையிலிருந்த தயிரை உண்டவனும், எட்டுத் திக்கும் விளங்கும் புகழ் கொண்டவனும், வளவிய தமிழைப் பயில்வோர் பின்னே திரிகின்றவனும், மேக நிறம் கொண்டவனும், மிக்க திறல் கொண்டு வெல்லும் வலிமை வாய்ந்தவனும், வெற்றியும் தூய்மையும் கொண்டவனுமான திருமால் மகிழும் மருகனே! பொருந்திய கடல் (போலத்) துந்துமி(பேரிகை) வாத்தியமும் குடமுழவு (வாத்தியமும்) . குழின் குமின்" என ஒலி செய்யவளம் பொருந்திய திருச்செந்துாரில் வந்தெழுந் தருளியுள்ள முருகனே ! - திங்களும் ஞாயிறும் (சந்திரனும் சூரியனும்) மேகமும் நாள் தோறும் (செல்வதற்கு வழி தடைப்பட்டு) மயங்கும்படி, அண்டம் விளங்க, வளர்கின்ற திருப்பரங்குன்றத்தில் எழுந்தருளியுள்ள பெருமாளே! (பதம் அடைவேனோ) 4 அருமை வாய்ந்த மங்கையர்களின் மலர் போன்ற அடிகளை வருடியும் (பிடித்தும், அவர்களுடைய) கருத்தை அறிந்த பின்பு அரையில் உள்ள உடையை அவிழ்த்தும் அங்குள்ள அரசிலை (போன்ற உறுப்பைத் தடவியும்) அவர் தம் இரண்டு தோள்களிற் பொருந்தி 1. திருச்செந்துாரில் வந்து எழுந்தருளினது - சூரனை வதைக்க முருகவேள் எழுந்தருளி வந்து திருந்செந்துாரில் தங்கினதைக் குறிக்கும்; வேலுடைய வள்ளல். செந்திமா நகரம் புக்கான்” (கந்த புராணம், திருச்செந்திப் படலம் - க). 'விசும்பாறாக விரை செலன் முன்னி.சீர் அலைவாய்ச் சேறலும் நிலைஇய பண்பே ' (திருமுருகாற்றுப்படை),