பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/393

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழநி திருப்புகழ் உரை 377 நல்லறிவு கெட்டுக்கிடக்கும்பொழுது யமன் ஓடிவந்து (என்னைத்) தொடர்ந்து பாசக்கயிற்றை ஆட்டி வீசி (என் உயிரைக்) கொண்டு போம்பொழுது, என்னைப் பெற்றவர்கள் என்னைச் சுற்றியழ, எனக்கு உற்றவர்கள் (வேண்டியவர்கள்) மிக -91էք, ஊராரின் (நல்ல வழியில் இரு என்று) சொன்ன) சொல்லுக்கு அடங்காத இவர், (இப்போது) காலனுக்கு அடங்கும்படி இவர் உயிர் போய்விடும்; இவருக்குப் பிரமன் இட்ட விதிப்படியே ஒலையில் முன் எழுதின எழுத்தின்படி - இன்று இறந்தது - எனக் கூறி, எடுங்கள் (பிணத்தை) எனக் கூற (அயல் நின்றார்) ஒடிச்சென்று நன்றாகப் பல (அல்லது புதிய) பறைகளைக் கொட்டி அரிச்சுடலை (நெருப்பு எரியும் சுடுகாட்டுக்குப்) போய், உடல் நன்றாக வேகும்படி (எரிமுட்டைகளால்) மூடும்படி பிணத்தைச் சேர்த்து, நெருப்பில் எரிபட்டார் எனத் (துயருடன்) கூறி ஒன்றுகூடி நீரில் முழுகி (அதனுடன்) விடுபட்டுப் போகும் பாசத்தினின்றும் விலகி, உனது நல்ல ஞானத் (திருவடித்) தாமரைமலரை அடைந்து, தமிழ்க் கவிகளை ஒதிப் பணிந்து உருகும்படியான அன்பை இன்று (அடியேனுக்குத்) தர, இனி வந்தருள வேண்டும்! தித்தா திரித்திகுட தத்தா தனத்த குக தோதக் கணங் கண்க கூகுக் கிணங் கிணென (ஒலிக்கும்படி) ஒப்பற்ற மயில்மீது ஏறி -