பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/336

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

320 முருகவேள் திருமுறை 13. திருமுறை குறிதரு வட்டத் தடர்ந்த சிந்துர முகதல முத்துப் பொலிந்தி லங்கிட கொடிய மயற்செய்ப் பெருந்த டந்தனில் மங்கலாமோ, இலகிய சித்ரப் புனந்த னிந்துறை குறமகள் கச்சுக் கிடந்த கொங்கைமி னினிதுறு பத்மப் பதம்ப ணிந்தருள் கந்தவேளே. எழுகடல் வற்றப் பெருங்கொ டுங்கிரி யிடிபட மிக்கப் ப்ரசண்டம் விண்டுறு மிகலர்ப தைக்கத் தடிந்தி லங்கிய செங்கைவேலா, பலவித நற்கற்படர்ந்த சுந்தரி பயில்தருவெற்புத் தருஞ்செழுங்கொடி பனைமுலை மெத்தப் பொதிந்து பண்புறு கின்றபாலைப். பலதிசை மெச்சத் தெரிந்த செந்தமிழ் பகரென இச்சித் துகந்து கொண்டருள் பழநியில் வெற்பிற் றிகழ்ந்து நின்றருள் தம்பிரானே. (37) 137. மாதர் நட்பு அற தனதன தத்தத் தனந்த தந்தன தனதன தத்தத் தனந்த தந்தன தனதன தத்தத் தனந்த தந்தன தந்ததான முகிலள கத்திற் கமழ்ந்த வண்பரி மளஅலர் துற்றக் கலந்தி டந்தரு முகிழ்நுதி தைத்துத் துயர்ந்த மங்கைய ரங்கமீதே. 1 1