பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழநி) திருப்புகழ் உரை 265 கம்ஸன் விட்ட சகடாசுரன் மாளும்படி வென்று, குருந்த மரத்தில் ஏறி, கோபிகாஸ்திரீகளின் கண்கள் சிவக்கும் படி அவர்களுடன் ஊடாடி அரிய வகைகளால் (அவர்களைப்) பார்த்தும், மகிழ்ந்தும், அழகாய் (உடன்) இருந்தும், இசைபாடி (அல்லது புகழுடன்) விளங்கின நாள்களில் அவர்கள்மீது அன்புடன் கண் குளிர்ந்த திருமால் மகிழ்ந்தருளும் மருகனே! யானை (ஐராவதம் வளர்த்த) வஞ்சிக் கொடி போன்ற தேவ சேனையையும், மான் (பெற்ற) மடந்தையாம் வள்ளியையும் இன்பம் பெருகவே அணைந்தருளும் மலைபோல வந்தருளிய, கடப்ப மாலை முற்பட்டு விளங்கும், அழகிய மார்பனே! பூங்கொத்துக்கள் மலரும் நீர்நிலைகள் நிரம்பிய 9ئے/%DGز விளங்கும் திரு. ஆவினன்குடியில் (உள்ள) குன்று. களின் எல்லா இடத்திலுமே விளங்கி வீற்றருளும் பெருமாளே! (வேசை)கள்... சுகந்தனையே யுகந்து உடல் மெலிவேனோ. 112 கரிய கூந்தலில் அணியப்பட்ட மலர் வரிசை விளங்க வில்லைப் போன்ற நெற்றியிற் பதித்துள்ள அழகிய பொட்டும் ஒளி பொருந்திய அம்புக்கு ஒத்துச் சுழற்சி கொண்டெழும் தாமரைக் கண்களும் கமுகுக்கு ஒத்த -