பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254 முருகவேள் திருமுறை 13. திருமுறை 107. புகழ் கனமா யெழுந்துவெற் பெனவே யுயர்ந்துகற் புர மாரணந்துளுத் திடுமானார். கனிவா யுகந்துசிக் கெனவே யணைந்துகைப் பொருளேயிழந்துவிட் டயர்வாயே! மனமே தளர்ந்துவிக் கலுமே யெழுந்துமட் டறவே யுலந்துசுக் கதுபோலே. வசமே யழிந்துவுக் கிடுநோய் துறந்துவைப் பெனவே நினைந்துனைப் புகழ்வேனோ, புனவேடர் தந்தபொற் குறமாது இன்புறப் புணர்காதல் கொண்டஅக் கிழவோனே. புனலேழு மங்கவெற் பொடுசூர் சிரங்கள்பொட் டெழவேலெறிந்தவுக் கிரவீரா, தினமேவு குங்குமப் புயவாச கிண்கிணிச் சிறுகீத செம் பதத் தருளாளா. சிவலோக சங்கரிக் கிறைபால பைங்கயத் திருவாவினன்குடிப் பெருமாளே. (8) 1. மாரணம் மந்திர வித்தையால் மரணத்தை உண்டுபண்ண எழும் கொலைக்கருவி, அஃதாவது இங்கே கொங்கை