பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

252 முருகவேள் திருமுறை [3- திருமுறை சாடு குன்றது பொட்டெழ மற்றுஞ் சூர னும்பொடி பட்டிட யுத்தஞ் சாத கஞ்செய்தி ருக்கைவி திர்க்குந் தனிவேலா; ஆல முண்டக ழுத்தினி லக்குந் தேவ ரென்புநி ரைத்தெரி யிற்சென் றாடு கின்றத கப்பனு கக்குங் குருநாதா. ஆட கம்புனை பொற்குடம் வைக்குங் கோபு ரங்களி னுச்சியு டுத்தங் காவினன்குடி வெற்பினி னிற்கும் பெருமாளே. 106. அருள் பெற அபகார நிந்தையட் டுழலாதேஅறியாத வஞ்சரைக் குறியாதே; உபதேசமந்திரப் பொருளாலே. உனை நானிணைந்தருட் பெறுவேனோ, இபமாமுகன் தனக் கிளையோனே. இமவான்மடந்தையந் தமிபாலா, ஜெபமாலை தந்த சற் குருநாதா. திருவாவினன்குடிப் பெருமாளே. (7) 1. அபசார நிந்தை' என்ற சில பிரதிகளிலிருந்த போதிலும், அபகார நிந்தை என்றே பழம் பிரதிகள் பலவற்றிலும் உள்ள து.