பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218 முருகவேள் திருமுறை (2 திருமுறை 93. இறைவனுடன் ஒன்றாகி நிற்றல் மூளும்வினை சேர மேல்கொண்டி டாஐந்து பூதவெகு வாய மாயங்கள் தானெஞ்சில் முடிநெறி நீதி யேதுஞ்செ யாவஞ்சி யதி பார மோகநினை வான போகஞ்செய் வேணண்டர் தேடஅரி தாய சீஞேயங்க ளாய் நின்ற மூலபர யோக மேல்கொண் டிடா நின்ற துளதாகி, நாளுமதி வேக கால்கொண்டு தீமண்ட வாசியன லுாடு போயொன்றி வானின்க ணாமமதி மீதி லுறுங்க லாஇன்ப அமுதுாறல். நாடியதன் மீது போய் நின்ற ஆநந்த மேலைவெளி யேறி நீயின்றி நாணின்றி நாடியினும் வேறு தானின்றி வாழ்கின்ற தொருநாளே, காளவிட மூணி மாதங்கி வேதஞ்சொல் பேதைநெடு நீலி பாதங்க ளால்வந்த காலன்விழ மோது சாமுண்டி பாரம்பொ டனல்வாயு. 1. அதிபாரம் கொங்கையைக் குறிக்கும். "அதிபாரவிதமுமுடை மாதர்" கணபதி துதி 4 ஆம்பாடல். 2. ஞேயம் - ஞானத்தினால் அறியப்படு பொருள். 3. வாசி - சுவாசம். 4. நாமம் - நிறைவு நாமவெள்ளத்து நடுவட் டோன்றிய' = பரிபாடல் 3.92. 5. மாதங்கி மதங்க முநிவர் தவஞ் செய்து சத்தியைப் பெண்ணாகப் பெற்று மாதங்கி எனப் பெயரிட்டு வளர்த்தார் என்ப (மதங்கர்) பாணர் குலத்தில் தோன்றியவள் எனலுமாம். " மதங்கர் குலப் பெண்களிற் றோன்றிய எம்பெருமாட்டி" அபிராமி. யந்தாதி 70, 11.