பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருச்செந்தூர்) திருப்புகழ் உரை 161 ய சொற்களை உடைய விசாகனே! கிருபாகரனே (திருச்) செந்துளரில் வி ற்றிருந்தருள்பவனாகி அடியேன் ஈடேறும் வண்ணம் (நல்) வாழ்வை எனக்கு அருளும் பெருமாளே. (வீணாள் படாதருள் புரிவாயே!) 67. கொலை செய்யும் மதயானைக்கு ஒப்பானதும், கஸ் துாரி அணிந்துள்ளதுமான கொங்கையாம் மலையை (மலை போன்ற கொங்கையை), குடம்போன்ற கொங்கையை உடைய மாதர்களின் - குமுதமலர் போன்றதும்,அமுதம் : துமான இதழ்களை (வாயூறலைப்) பருகியும், யும் மோக மயக்கம் கொண்டுள்ள நாயேனுடைய, தன்மையை அழிக்கின்ற (நன்னிலையை அழிக்கின்ற) கவலைகள் (எல்லாம்) கெட உனது அருட்பார்வையில் நின்ற நிலை பெறுதற்கு உனது திருவடி மலரிணை என் மனத்தில் நிலைபெற்றிருக்க உன்மீது பற்றைப் பெறுவேனோ; வில்லாக வடக்கிருக்கும் மலையாம் மேருவைக் கொண்ட வராகிய (சிவபிரான்) அருளிய, செவ்விய சொற்களை உடைய சிறு குழந்தையே - அலைகடலின் நடுவே நின்ற அசுரனை (சூரனை) வதைத்த திருச்செந்துார் நகர்வேலனே! வில்லை நிகர்த்த நெற்றியை உடைய - யானை போற்றி வளர்த்த (ஐராவதம் வளர்த்த) மயிலன்ன தேவ சேனையும், குறமகளாம் வள்ளியும் விரும்பிச் சேர்பவனே! வெற்றிச் சின்னம் ಸ್ಟ್ மரகத (பச்சை) மயிலில் (ஏறி) வரும் குமரனே! டங்கப் பெருமாளே! (சுயம்பு மூர்த்தியே!) o (நின்பற் றடைவேனோ)