பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருச்செந்தூர்) திருப்புகழ் உரை 137 53 இருண்ட விரிந்த கூந்தலை விரித்து ஆற்றவும், அழுத்தமாகக் கட்டியிருந்த உடையைத் தளர்த்திக் காட்டவும், இரண்டு விழிக் கடைகளைச் சுழற்றிச் செருக்குடன் பார்க்கவும் ஆண் மக்களோடு - *

  • ===

வெற்றிலையையும் வெட்டுப்பாக்கையும் நடிப்புடன் கேட்கவும், மறுமொழி பலபல சொல்லிச் செர்ல்லி இடையிடையே சற்று நகை புரிந்தும், (இது எங்கள் வீடே வருக என்று ஒரு சொல் சொல்லி மாட்டுவித்தும், விரிந்த மலர்ப்படுக்கையில் அணைத்துச் சேர்க்கவும், வந்த பொருள் அளவுக்கு தக்கபடி உருக்கங் காட்டித் தெளிவித் தும், (பின்னர்) நிந்தை மொ ழி கூறி அலங்கரித்துள்ள (வீட்டில்) நுழைந்தால் அடித்து வெருட்டவும், (இங்ங்னம்) ஒரு தன்லக் காமத்தராய்ப் ணரும் கொடியோர்களால் வரும் பழிப்பு நீங்க உனது திருவடிகளைப் போற்றுவது எந்த நாளோ! நிறமுள்ள வயிரமணிகளை அடித்துத் தள்ளி, வளைந்த இளமூங்கிலின் உருவும் வ்ெளுத்துத் தோற்றுப் போம்படியான (வெண்மையையும்), ஒலிக்கின்ற இசையையும் உடைய அருவி கொழித்து இறைக்கப் பெருகிய நீர் செல்லுகின்றஆழம் படுகின்ற காட்டாற்றின் நடுவு, அடைபட்டு எழுந்த மேட்டு மணலால் இறுகி நிற்கும் திட்டினிடத்தே உள்ள் சோலையில் அடர்ந்த குளிர் நிழலில் அருவியைக் கலக்கியும், பூப்புனைந்தும், வண்டல் (மகளிர் விளையாட்டு வகை) விளையாடியும் - மணம் வீசும் பூங்கொத்துக்களை விட்டுக் கதிர்விடும் தினைவிளை புனத்தின் நடுவில் (உள்ள) பரண்மீ து தான் இருத்தலைக் காட்டிய அரும்பும் கொங்கைகளை (உடைய) இளைய குறத்திக்கு ஆட்பட்ட திருச்செந்துார்ப் பெருமாளே!