பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/1058

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று -கதிர்காமம்) திருப்புகழ் உரை 585 426 பாரங்கொண்டதும் முத்துமாலை அணிந்ததும், சந்தனம் அணிந்ததும், புளகாங்கிதம் கொண்டதும் அழகியதுமான கொங்கைகளால் நெருக்குண்ணும் இடையினாலும். சர்க்கரை போலத் தித்தித்த ராகமொழியினாலும், (மன்மதனது) மலர்ப்பாணம் போல(த் தைக்கும்) கன். களாலும், (கண்டோர் மனதை) காமமயக்கால் மூடிவிடுகின்ற மாதர்களின் மேகம் போன்ற கூந்தற் கட்டினாலும், மகர மீன்போன்ற குழை அலங்காரம் உள்ள காதினாலும், முகமண்டலத்தாலும், அதிக மோகம் கொண்ட காமியாகிய நான் சிக்கிக்கிடந்த ஆசையை (அடியோடு) மறக்கச் செய்த (உனது) திருவடிகளை மறக்கவும் வருமோ (மறக்கவும் கூடுமோ)- மறவேன், மறவேன் என்றபடி, தேரில் எழுந்தருளும் சூரியன் (ராவணனுடைய அதிகாரத் துக்கு) அஞ்சி உள்ளே புகாத பழைய ஊராகிய இலங்கையில் பத்துத்தலையனாம் ராவணனைக் கலக்கிப் பிசைந்து கடைந்த அரிமாயன் (திருமாலின்) சீரான மருகனே! மிக உக்ரமான யானைகள் எதிர்ப்படும் - மணிகள் (ரத்னங்கள்) கிடக்கும் திருக்கோணமலையில் வீற்றிருக்கும் உக்ரமான கதிர்காம (முருகனே): வீரனே! (தினைப்) புன மலையாம் வள்ளிமலையில் மயில் போன்ற வேடப்பெண் வள்ளியின் மேகலை அணிந்த இடையின் கொத்திலும் (அலகால் குத்துதல் போன்ற கொத்துதலிலும்), இரண்டு தாள்களிலும் (மரம், தினைப்பயிர் முதலியவற்றின் அடிப்பாகத்திலும்), வாசனை தங்கிய மேகம் போன்ற கூந்தலிலும், பசிய மூங்கிலை ஒத்த தோள்களிலும், சிவந்த (ஒளித் திரளைக்கொண்ட வேல் போன்ற கண்களிலும் சிக்கிக்கொண்ட பெருமாளே! (கால்களை மறக்கைக்கும் வருமோதான்)