பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/1000

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று - புகழிமலை திருப்புகழ் உரை 527 கருணை பொழியும் அருளே முந்துவதால் அன்புடன் கவுரி (பார்வதி), கொஞ்சி நிற்க, கலகலென்று (தண்டை ஒலிக்க) வருகின்ற கடம்பணியும் திருமார்பனே! யானைமுகக் கடவுளைத் தமையனாக வாய்க்கப்பெற்ற இளைய குமரனே! அழகுடன் கனககிரி (பொன்மலையில் விளங்க வீற்றிருக்கும் கந்தப் பெருமாளே! (வணங்க அருள்வாயே) புகழிமலை 401 பொருந்திய மலரின் நறுமணம் கொண்ட கூந்தலாலும், ரேகைகள் கொண்ட கண்ணாலும், திங்கள் போன்ற முகத்தாலும் (அல்லது அறிவாலும்) மலைக்கு ஒப்பான இளங் கொங்கைகளாலும், மோகத்தைத் தருகின்ற பெண்களின் இனத்தாலும் (அல்லது உபாயத்தாலும்) வேண்டியது என்று எண்ணப்படும் பொருளாலும், மனைவி, குழந்தை என்கின்ற கடல் அலையில் (நான்) முழுகி அலைவேனோ; தாமரையன்ன (உனது) திருவடி வாழ்வை (அடியே. னுக்குத்) தர மயில் மீது கருணையுடனே அடியேன் முன்வரவேணும். * அரிய வேதங்கள் ஒதும் பிரமன் முதலாகத் திருமாலும் தேவர்களும் முநிவேந்தர்களும் தொழுவோனே!