திருப்புகழ் 1233 கன்னியர் கடு விடம்  (பொதுப்பாடல்கள்)
Thiruppugazh 1233 kanniyarkaduvidam  (common)
Thiruppugazh - 1233 kanniyarkaduvidam - commonSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

mp3
 
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தன்னன தனதன தன்னன தனதன
     தன்னன தனதன ...... தனதான

......... பாடல் .........

கன்னியர் கடுவிட மன்னிய கயலன
     கண்ணிலு மிருகன ...... தனமீதுங்

கன்மைகள் மருவிய மன்மத னுருவிலி
     மென்மைகொ ளுருவிலு ...... மயலாகி

இன்னல்செய் குடிலுட னின்னமு முலகினி
     லிந்நிலை பெறவிங ...... னுதியாதே

யெண்ணுமு னடியவர் நண்ணிய பதமிசை
     யென்னையும் வழிபட ...... விடவேணும்

பொன்னவ மணிபயில் மன்னவ புனமற
     மின்முலை தழுவிய ...... புயவீரா

புண்ணிய முளபல விண்ணவர் தொழுமுதல்
     எண்மலை யொடுபொரு ...... கதிர்வேலா

தன்னிறை சடையிறை யென்முனி பரவரு
     இன்னிசை யுறுதமிழ் ...... தெரிவோனே

தண்ணளி தருமொரு பன்னிரு விழிபயில்
     சண்முக மழகிய ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

கன்னியர் கடு விட(ம்) மன்னிய கயல் அன கண்ணிலும் இரு
கன தனம் மீதும்
... பெண்களின் கடுமையான விஷம் பொருந்திய,
கயல் மீன் போன்ற கண்களிலும், இரு மார்பகங்கள் மீதும்,

கன்மைகள் மருவிய மன்மதன் உருவு இலி மென்மை கொள்
உருவிலும் மயலாகி
... கல் போன்று உறுதியான வேலைத் திறம்
பொருந்திய மன்மதன், உருவம் இல்லாதவன், (மலரம்பை எய்வதானால்)
மென்மை சேர்ந்த அப்பெண்களின் உருவத்தின் மீதும் காம மயக்கம்
கொண்டு,

இன்னல் செய் குடிலுடன் இன்னமும் உலகினில் இந்நிலை
பெற இ(ங்)ஙன் உதியாதே
... துன்பம் ஏற்படுகின்ற வீடாகிய இந்த
உடலுடன் இன்னமும் இந்த உலகிடையே இதே அவல நிலையை
அடையும்படி, இவ்வாறு நான் பிறவாமல்,

எண்ணும் உன் அடியவர் நண்ணிய பதம் மிசை என்னையும்
வழி பட விடவேணும்
... உன்னைத் தியானிக்கும் அடியார்கள்
அடைந்துள்ள உனது திருவடியின் மீது வழிபாடு செய்யுமாறு
என்னையும் அந்த நன்னெறியில் செலுத்த வேண்டுகிறேன்.

பொன் நவ மணி பயில் மன்னவ புன மற மின் முலை தழுவிய
புயவீரா
... பொன்னாலாகிய நவ மணி* ஆபரணங்களை அணிந்துள்ள
அரசே, தினைப் புனத்தில் உள்ள வேட்டுவக் குலத்து ஒளி தரும்
(வள்ளியின்) மார்பைத் தழுவிய புயங்களைக் கொண்ட வீரனே,

புண்ணியம் உள பல விண்ணவர் தொழும் முதல் எண்
மலையொடு பொரு கதிர்வேலா
... புண்ணியம் செய்து சுவர்க்கத்தில்
வாழும் பல தேவர்கள் தொழுது நிற்கும் முதல்வனே, கிரவுஞ்ச கிரி,
(அசுரருக்கு அரணான) எழு கிரி ஆக எட்டு மலைகளுடன் சண்டை
செய்த, ஒளி வீசும் வேலை உடையவனே,

தன் இறை சடை இறை என் முனி பரவ அரு இன்னிசை உறு
தமிழ் தெரிவோனே
... தனக்குத் தானே தலைவனான, சடையை
உடைய சிவபெருமான் என்று சொல்லப்படும் கடவுளைத் துதிப்பதற்கு
அருமையான இனிய இசை அமைந்த தமிழ் மறையை (தேவாரத்தை,
திருஞானசம்பந்தராக வந்து) உலகோர் தெரியச் சொன்னவனே,

தண் அளி தரும் ஒரு பன்னிரு விழிபயில் சண்முகம் அழகிய
பெருமாளே.
... குளிர்ந்த கருணையைப் பாலிக்கின்ற ஒப்பற்ற
பன்னிரண்டு கண்களைக் கொண்ட ஆறு திருமுகனே, அழகு வாய்ந்த
பெருமாளே.


* ஒன்பது மணிகள்:

வைரம், வைடூர்யம், முத்து, பவளம், நீலம், மரகதம், கோமேதகம், புஷ்பராகம், மாணிக்கம்.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 3.562  pg 3.563  pg 3.564  pg 3.565 
 WIKI_urai Song number: 1232 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 1233 - kanniyar kadu vidam (common)

kanniyar kaduvida manniya kayalana
     kaNNilu mirukana ...... thanameethum

kanmaikaL maruviya manmatha nuruvili
     menmaiko Luruvilu ...... mayalAki

innalsey kudiluda ninnamu mulakini
     linnilai peRavinga ...... nuthiyAthE

yeNNumu nadiyavar naNNiya pathamisai
     yennaiyum vazhipada ...... vidavENum

ponnava maNipayil mannava punamaRa
     minmulai thazhuviya ...... puyaveerA

puNNiya muLapala viNNavar thozhumuthal
     eNmalai yoduporu ...... kathirvElA

thanniRai sadaiyiRai yenmuni paravaru
     innisai yuRuthamizh ...... therivOnE

thaNNaLi tharumoru panniru vizhipayil
     saNmuka mazhakiya ...... perumALE.

......... Meaning .........

kanniyar kadu vida(m) manniya kayal ana kaNNilum iru kana thanam meethum: On the kayal-fish-like eyes, filled with intense poison, and the two breasts of women,

kanmaikaL maruviya manmathan uruvu ili menmai koL uruvilum mayalAki: and on their smooth figure softened by (the flowery arrows shot by) Manmathan (God of Love), the formless one, who carries on his rock-solid activity, I have developed a delusory and passionate attachment;

innal sey kudiludan innamum ulakinil innilai peRa i(ng)ngan uthiyAthE: I do not want to be born in this world again with this wretched body, which is the cottage for all miseries;

eNNum un adiyavar naNNiya patham misai ennaiyum vazhi pada vidavENum: instead, kindly lead me to the righteous path of worshipping Your hallowed feet that have been attained by the devotees meditating on You!

pon nava maNi payil mannava puna maRa min mulai thazhuviya puyaveerA: You have been adorned with golden ornaments embedded with nine precious gems*, Oh my King! With Your hallowed shoulders, You hugged the bright bosom of VaLLi, the damsel of the hunters, in the millet field, Oh valorous One!

puNNiyam uLa pala viNNavar thozhum muthal eN malaiyodu poru kathirvElA: You are the primordial Lord worshipped by the celestials who live in heaven because of their good deeds! You fought with the eight mountains (Krouncha and the seven hills guarding the demons) wielding Your dazzling spear, Oh Lord!

than iRai sadai iRai en muni parava aru innisai uRu thamizh therivOnE: He is the Lord unto Himself; He is Lord SivA with matted hair; to extol that God in sweet musical hymns, You composed, for the benefit of the world, the Tamil VEdA (ThEvAram, coming as ThirugnAna Sambandhar)!

thaN aLi tharum oru panniru vizhipayil saNmukam azhakiya perumALE.: On Your six hallowed faces, You have the unique twelve eyes that shower compassion, Oh Handsome and Great One!


* The nine precious gems:

diamond, cat's eye, pearl, coral, blue sapphire, yellow sapphire, emerald, hessonite (gomEdhakam) and ruby.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

mp3
 

Thiru Arunagirinathar's Thiruppugazh - 1233 kanniyar kadu vidam - common


   Kaumaram.com சமீபத்தில் DDOS தாக்குதலால் பாதிக்கப்பட்டது.
எனவே, படங்கள் மற்றும் ஆடியோ தற்காலிகமாக கிடைக்காது.
நான் இதை படிப்படியாக சரிசெய்ய முயற்சிக்கிறேன்.
உங்கள் பொறுமைக்கும் புரிந்துணர்வுக்கும் நன்றி. ... வலைத்தள நிர்வாகி.  



  Kaumaram.com was recently affected by DDOS attack.
As such, images and audio will be temporarily unavailable.
I am trying to correct this progressively.
Thank you for your patience and understanding. ... webmaster.  


... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 


Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

© Copyright Kaumaram dot com - 2001-2040

COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED.

Please contact me (the webmaster), if you wish to place a link in your website.

email: kaumaram@gmail.com

Disclaimer:

Although necessary efforts have been taken by me (the webmaster),
to keep the items in www.kaumaram.com safe from viruses etc.,
I am NOT responsible for any damage caused by use of
and/or downloading of any item from this website or from linked external sites.
Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items
from the internet for maximum safety and security.

[W3]