திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 354 அம்புலி நீரை (திருவானைக்கா) Thiruppugazh 354 ambulineerai (thiruvAnaikkA) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தந்தன தானத் தானன தந்தன தானத் தானன தந்தன தானத் தானன ...... தனதான ......... பாடல் ......... அம்புலி நீரைச் சூடிய செஞ்சடை மீதிற் றாவிய ஐந்தலை நாகப் பூஷண ...... ரருள்பாலா அன்புட னாவிற் பாவது சந்தத மோதிப் பாதமு மங்கையி னானிற் பூசையு ...... மணியாமல் வம்பணி பாரப் பூண்முலை வஞ்சியர் மாயச் சாயலில் வண்டுழ லோதித் தாழலி ...... லிருகாதில் மண்டிய நீலப் பார்வையில் வெண்துகி லாடைச் சேர்வையில் மங்கியெ யேழைப் பாவியெ ...... னழிவேனோ கொம்பனை நீலக் கோமளை அம்புய மாலைப் பூஷணி குண்டலி யாலப் போசனி ...... யபிராமி கொஞ்சிய வானச் சானவி சங்கரி வேதப் பார்வதி குன்றது வார்பொற் காரிகை ...... யருள்பாலா செம்பவ ளாயக் கூரிதழ் மின்குற மானைப் பூண்முலை திண்புய மாரப் பூரண ...... மருள்வோனே செந்தமிழ் பாணப் பாவலர் சங்கித யாழைப் பாடிய தென்திரு வானைக் காவுறை ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... அம்புலி நீரைச் சூடிய செம் சடை மீதில் தாவிய ஐந்தலை நாகப் பூஷணர் அருள்பாலா ... நிலவையும் கங்கையையும் தரித்துள்ள செஞ்சடை மேல் தாவி நிற்கும் ஐந்து தலை நாகத்தை ஆபரணமாக அணிந்துள்ள சிவ பெருமான் அருளிய குழந்தையே, அன்புடன் நாவில் பாவது பாதமும் சந்ததம் ஓதி அங்கயினால் நின் பூசையும் அணியாமல் ... அன்புடனே நாவார பாடல்களால் எப்பொழுதும் உனது பாதத்தை ஓதி, உள்ளங்கை கொண்டு உன்னைப் பூஜிக்கும் ஒழுக்கத்தை மேற் கொள்ளாமல், வம்பு அணி பாரம் பூண் முலை வஞ்சியர் மாயச் சாயலில் ... கச்சு அணிந்ததும் ஆபரணம் பூண்டதும் ஆகிய மார்பினை உடைய வஞ்சிக் கொடி போன்ற விலைமாதர்களின் மாய அழகிலும், வண்டு உழல் ஓதித் தாழலில் இரு காதில் ... வண்டுகள் திரியும் கூந்தலின் சரிவிலும், இரண்டு காதுகளிலும், மண்டிய நீலப் பார்வையில் வெண் துகில் ஆடைச் சேர்வையில் ... நெருங்கிய கரு நிற மை பூசிய கண்களின் பார்வையிலும், வெண்ணிறத்து ஆடையின் சேர்க்கையிலும், மங்கி எய் ஏழைப் பாவியேன் அழிவேனோ ... அறிவு மயங்கிப் போய் ஏழைப் பாவியேனாகிய அடியேன் அழிந்து போவேனோ? கொம்பு அனை நீலக் கோமளை அம்புய மாலைப் பூஷணி ... கொம்பை ஒத்த மெல்லிய நீல நிற அழகி, தாமரை மலர் மாலையை அணியாக அணிந்தவள், குண்டலி ஆலப் போசனி அபிராமி ... சுத்த மாயையாம் சக்தி, விஷத்தை உண்டவள், பேரழகி, கொஞ்சிய வானச் சானவி சங்கரி வேதப் பார்வதி ... குலவி மகிழும் ஆகாச கங்கை போலத் தூய்மை நிறைந்தவள், சங்கரி, வேதங்கள் போற்றும் பார்வதி, குன்று அது வார் பொன் காரிகை அருள்பாலா ... இமயத்தின் நெடிய தவத்தின் பயனாக வந்த அழகிய மாது ஈன்றளித்த மகனே, செம் பவளம் ஆயக் கூர் இதழ் மின் குற மானை ... சிவந்த பவள நிறமான மெல்லிய வாயிதழ்களை உடையவளும், ஒளி பொருந்தியவளும் ஆகிய குறப் பெண்ணான வள்ளியின் பூண் முலை திண் புயம் ஆரப் பூரணம் அருள்வோனே ... ஆபரணம் அணிந்த மார்பகங்களை உனது திண்ணிய புயங்களால் நன்கு அணைக்க, பூரணமான திருவருளை அவளுக்குப் பாலித்தருளியவனே, செந்தமிழ் பாணப் பாவலர் சங்கித யாழைப் பாடிய ... செந்தமிழ் ஞானம் உள்ள பாணர்குலப் பாவலர் (திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார் திருஞான சம்பந்தர் பாடலுக்கு ஏற்ப) இசையுடன் யாழை வாசித்த* தென் திரு வானைக்கா உறை பெருமாளே. ... அழகிய திருவானைக்காவில் வீற்றிருக்கும் பெருமாளே. |
* முன்பு, திருவானைக்காவில், சைவக் குரவர் நால்வரில் ஒருவரான திருஞானசம்பந்தர் தேவார இசை பாட, திருநீலகண்டர் அதற்கேற்ப யாழை மீட்டினார் - பெரிய புராணம். |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 2.131 pg 2.132 pg 2.133 pg 2.134 WIKI_urai Song number: 496 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை & சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) Sri Maha Periyava Thirupugazh Sabha & Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) | பாடகர் பக்கத்திற்கு to singer's page |
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) இப்பாடலின் பொருள் Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) meanings in Tamil |
Song 354 - ambuli neerai (thiruvAnaikkA) ampuli neeraic chUdiya senjadai meethiR RAviya ainthalai nAkap pUshaNa ...... raruLbAlA anpuda nAviR pAvathu santhatha mOthip pAthamum angaiyi nAniR pUsaiyu ...... maNiyAmal vampaNi pArap pUNmulai vanjiyar mAyac chAyalil vaNduzha lOthith thAzhali ...... lirukAthil maNdiya neelap pArvaiyil veNthuki lAdaic chErvaiyil mangiye yEzhaip pAviye ...... nazhivEnO kompanai neelak kOmaLai ampuya mAlaip pUshaNi kuNdali yAlap pOsani ...... yapirAmi konjiya vAnac chAnavi sankari vEthap pArvathi kunRathu vArpoR kArikai ...... yaruLbAlA sempava LAyak kUrithazh minkuRa mAnaip pUNmulai thiNpuya mArap pUraNa ...... maruLvOnE senthamiz pANap pAvalar sangitha yAzhaip pAdiya thenthiru vAnaik kAvuRai ...... perumALE. ......... Meaning ......... ampuli neeraic chUdiya sem sadai meethil thAviya ainthalai nAkap pUshaNar aruLbAlA: You are the child of Lord SivA who wears the five-hooded and pouncing snake as a jewel on His matted hair which also holds the crescent moon and River Ganga! anpudan nAvil pAvathu pAthamum santhatham Othi angayinAl nin pUsaiyum aNiyAmal: I never praise Your hallowed feet singing Your glory with devotion to my tongue's content nor do I follow the righteous path of worshipping You with my palms; vampu aNi pAram pUN mulai vanjiyar mAyac chAyalil: (instead), I crave for the enchanting beauty of the vanji (rattan reed) creeper-like whores with bejewelled and voluptuous breasts, tightly clad, vaNdu uzhal Othith thAzhalil iru kAthil: the coiffures in their sliding hair where beetles hover about, their two ears, maNdiya neelap pArvaiyil veN thukil Adaic chErvaiyil: the deep gaze from their eyes tinted with bluish mascara and their white attire of woven fabric; mangi ey Ezhaip pAviyEn azhivEnO: losing my sense like this, am I, the miserable sinner, destined to be doomed? kompu anai neelak kOmaLai ampuya mAlaip pUshaNi: She is creeper-like and gorgeous, with light bluish complexion; She wears as a jewel a garland of lotus; kuNdali Alap pOsani apirAmi: She is Shakthi, appearing as pure delusion; She devours the evil poison as food; She is exquisitely beautiful; konjiya vAnac chAnavi sankari vEthap pArvathi: She is pure like the caressing and bubbly water of the River Ganga at its origin, namely the sky; She is the consort of Lord Sankara; She is PArvathi worshipped by the vEdAs; kunRu athu vAr pon kArikai aruLbAlA: She is the beautiful gold-like maiden delivered as a boon to Mount HimavAn for his long penance; and You are Her Son, oh Lord! sem pavaLam Ayak kUr ithazh min kuRa mAnai: Her tender lips are like the red coral; She is the dazzling damsel of the KuRavAs; pUN mulai thiN puyam Arap pUraNam aruLvOnE: You hug the bejewelled bosom of that VaLLi with Your strong shoulders and bless her with total and true Knowledge. senthamizh pANap pAvalar sangitha yAzhaip pAdiya: In this town, once, the great poet* (ThiruneelakaNda NAyanAr) who was an expert in Tamil played the string instrument (yAzh) musically (accompanying the singing by ThirugnAna Sambandhar); then thiru vAnaikkA uRai perumALE.: this is the beautiful place ThiruvAnaikkA, which is Your abode, Oh Great One! |
* In ThiruvAnaikkA, ThirugnAna Sambandhar, one of the four great Savants of Saivism, once sang ThEvAram hymns to the musical accompaniment on the string instrument by Thirunilakantar, another great Saivite - Periya PurANam. |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |