பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194 முருகவேள் திருமுறை 18ஆம் திருமுறை குமாரக் கடவுளே! இருவினைப் பரப்பைக் கடந்து உன் திருவடியை யானடையுங் காலமென்றைக்கு? (கு உ) (1) வள்ளியைக் களவிற் புணர்ந்தது: "கழை செய் தோட்குற மயிலை வேட்டுயர் களவினாற் புணர் கந்தவேளே திருப்புகழ் 1060 (2) முருகன் திருவடியைக் கூடுதற்கு விரும்புதல் உய்யும் வகையறியேன் மலர்த்தாள் தருவாய் - தண்டையம் புண்டரிகம் தருவாய்-கந்தரலங்காரம் 41,92 இருதாள் வனசம் தர என்றிசைவாய்', கதிகாண மலர்க்கழல் என்றருள்வாய் கந்தரநுபூதி-2435 44. முத்திக்கு வழியை உபதேசித்தருளுக சேதாம் பலதுறை வேறும் பணிகங்கை செல்வநந்தன் சேதாம் பலதுறை யாதசிற் றாயன் றிருமருக சேதாம் பலதுறை செவ்வாய்க் குறத்தி திறத்தமுத்திச் சேதாம் பலதுறை மீதென் றெனக்குப தேசநல்கே (ப உ) சேதாம் - சேது என்னுந் தீர்த்த முதலாகிய, பல துறை வேறும் மற்றைப் பல தீர்த்தங்களும், பணி வழிபடத்தக்க கங்கை பகீரதியின்,செல்வ-மைந்தனே! நந்தன் சேநந்தகோபன் பாலகனாகிய, தாம்பலது-நவநீதக் கள்வராய்க் கட்டுண்ட கயிற்றாலன்றி, உறையாத மற்றொன்றாலுங் கட்டுண்ணப்படாத சிற்றாயன் சிற்றிடையனான கிருஷ்ணமூர்த்தியினது, திரு மருக - சிறந்த மருகோனே சேதாம்பலது சிவந்த ஆம்பற்பூ நிறம்போலும், உறை உற்ற செவ் வாய் சிவந்த வாயையுடைய குறத்தி திறத்த-வள்ளிநாயகி மணாளனே! முத்திச் சேஎனக்கும் முத்திக்கும் இருக்கிறதுாரத்தை தாம் கடப்பதாகிய, பலதுறை ஈதென்று - நற்பலனைத் தரும் வழியிதுவென்று எனக்கு அடியேனுக்கு உபதேச நல்கு உபதேசம் அருளவேண்டும் (எ று) நீ தோன்றாஎழுவாய்.நல்கு-பயனிலை.ஏ-அசை (க உ) கங்காதேவியின் மைந்தனே திருமான் மருகோனே! வள்ளிநாயகனே எவற்றினுந் தூரமாயிருக்கின்றமோகூத்தைச் சேரும் நல்வழியிஃதென்று அடியேற்கு உபதேசித்தருள வேண்டும் (கு உ) கங்கையைப் பிற தீர்த்தங்கள் வணங்குவது பாடல் 20 பார்க்க கண்ணன் கயிற்றாற் கட்டுண்டது-திருப்புகழ் 1172 பக்கம் 4.20 குறிப்பு ஆம்பலது உறை செவ்வாய் வாயாம்பல் வாசம்' திருப்புகழ் 1257.